உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

கண்டிலம்

மறைமலையம் - 27

ன்னும் தாயுமானச் செல்வனார் தாமுணர்த்தப் புகுந்த வேதாந்த சித்தாந்த முடிபு பொள்ளெனப் புலப்படுதற் பொருட்டுப் ‘பூரண அறிவிற் கண்டிலம்’ என்றும் ‘அதனால் போற்றி யிப்புந்தி யோடிருந்து தாரணியுள்ள மட்டுமே வணங்க' என்றும்அறிவுறுத்தருளினார். இவற்றுட் ‘பூரண வறிவிற் என்பது சித்தாந்த முடிபையும், மற்றையது வேதாந்த முடிபையும் இனிது அறிவுறுக்கின்றன. சிவனது அருட்பரிபூரணம் உயிராற் பெறப்பட்ட விடத்து உயிர்க்கொரு செயலுமின்றி ஆன்ம வியற்கை யெல்லாம் முழுதுங் கெட்டுச் சிவமே யெங்குமாய் நிற்கு மாகலின் ஆண்டு ஞாதுருஞான ஞேயப் பாகுபாடு சிறிதுங் காணப்படுவதில்லை யென்றார். பிறாண்டும் ஆசிரியர் அச் சித்தாந்த முத்தியி னியல்பு விளங்கத் தெரிப்பான் வேண்டித், தானான தன்மயமேயல்லா லொன்றைத் தலையெடுக்க வொட்டாது

66

66

தலைப்பட்டாங்கே போனாலுங் கர்ப்பூர தீபம்போலப் போயொளிப்பதல்லாது புலம்வேறின்றாம் ஞானாகாரத்தினொடு ஞேயமற்ற ஞாதுருவு நழுவாமனழுவி நிற்கும்

ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வா ரதுவானா லதுவாவரதுவே சொல்லும்” "அதுவென்றா லெதுவெனவொன் றடுக்குஞ் சங்கையாதலினா லதுவெனலு மறவேவிட்டு

மதுவுண்ட வண்டெனவுஞ் சனகனாதி மன்னவர்கள் சுகர் முதலோர்

வாழ்ந்தாரென்றும் பதியிந்த நிலையெனவு மென்னையாண்டபடிக்கு நிருவிகற்பத்தாற் பரமானந்தக் கதி கண்டு கொள்ளவு நின்னருள் கூரிந்தக் கதியன்றி யுறங்கேன்மேற்

""

கருமம்பாரேன்” என்றருளிச்செய்த திருவாக்குகளின் அருமை பெருமையை என்னென்பேம்! "அதனாற் போற்றி யிப் புந்தியோடிருந்து தாரணி யுள்ளமட்டுமே வணங்க என்றது சீவன் முத்தர் தம்மருமைச்சரீரத் தோடிருக்குங் காறும் 'நான்' என்னும் உணர் வு இடை யிடை நிகழச் சிவோகம் பாவனை செய்திருக்குமாறு வகுத்துணர்த்தியது. 'இப்புந்தி' என்பது ‘நான்’ என்னும் உணர்வை, வ்வுட லொழிந்தபின் இச்சிவோகம் பாவனையினின்று முறுகிய அவர் 'கர்ப்பூர தீபம்' போலச் சிவனருளாய்க் கரைந்து போவர் என்க.

இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/305&oldid=1591275" இலிருந்து மீள்விக்கப்பட்டது