உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த சித்தாந்தம்

279

என்னும் பத்தாஞ் சூத்திரம் வேதாந்தப் பொருளான சிவோகம் பாவனை உணர்த்துவதாம். வேதாந்தத்தின் பயன் பாசக்ஷயம் பண்ணுதலே யாமென்பது மேலே விரித்துக் காட்டப் பட்டமையின், பதினோராஞ் சூத்திரத்தி லுணர்த்தப்படும் சித்தாந்த முத்தி முடிவுக்கு முன்னதாகப் பாசக்ஷயம் பண்ணுதற் கண் நிகழும் வேதாந்த வழியை ஆசிரியர் மெய்கண்டதேவர் பத்தாஞ் சூத்திரத் தோதியருளினார் என்க. பின்னர்க்,

66

6

காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற்

காண வுள்ளத்தைக் கண்டு காட்டலி

னயரா வன்பி னான்கழல் செலுமே”

என்னும் பதினோராஞ் சூத்திரத்தில் சித்தாந்த முத்திமுடிபு என்க. இங்ஙனம் வேதாந்தமுஞ்

நிலையிட்டருளினார்

சித்தாந்தமும் ஒன்றுக் கொன்றணுக்கமாய் நிற்றலினாலன்றே,

“வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்றவித்தகச்சித்

"வேதாந்த சித்தாந்தமே பிறவாவீடென்

ஓதாமல் வேதமுணர்ந்தோன்"

தர்கணமே”

“ஓரும்வேதாந்த மென்னுச் சியிற்பழுத்த

ஆராவின்பவருங்கனிபிழிந்து

சாரங்கொண்ட சைவசித்தாந்தத்

தேனமுதருந்தினர்சிலரே

என்றற் றொடக்கத்துத் திருவாக்குக ளெழுந்தன.

இனி, இங்ஙனம் வேதாந்த சித்தாந்தம் என்னும் ரண்டனுள் வேதாந்தம் சித்தாந்தத்திற்கு வழியாய் நிற்றல் பற்றியன்றே பிரதமத்தில் எடுத்துக் கொண்ட திருவாக்கில் ‘ஆரணம்' மார்க்கமாம் என்றும், ‘ஆகமம்' அம்மார்க்கத்திற் செல்லுங் குதிரையா மென்றும் சொல்லப்பட்டன. வேதாந்த முடிபான 'சோகம் பாவனை' தலைப்படுதலின்றிச் சித்தாந்தத் துட்புகுதல் ஒருவாற்றானுங் கூடாமையின், அச்சோகம் பாவனை வழியே செல்லுவதாகிய சித்தாந்த முத்தியினைக் குதிரை யென்றுவமித்தது பெரிதும் பொருத்த முடைத்தாதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/304&oldid=1591274" இலிருந்து மீள்விக்கப்பட்டது