உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

❖ * மறைமலையம் - 27

இனி, இங்ஙனமெல்லாம் பலவகையாலும் உயர்ந்த சைவசமயத்தைப்

பாதுகாத்துக்கொள்ளும்

வழிகள் என்னென்றால், சைவசமயத்திற் பிறக்குந் தவம் பெற்றவர்கள் முதலில் தம்மால் வணங்கப்பட்டு வரும் முழுமுதற் கடவுளான சிவத்தின் இயல்புகளை அறிந்தோரிடத்தும் நூல்களிடத்துங் கேட்டும் படித்தும் நன்கு அறிந்துகொள்ளுதல் வேண்டும். பெண்பாலாரே பிள்ளைகளின் நல்லறிவு வளர்ச்சிக்கும் நல்லொழுக்கத்திற்குங் காரணராக இருத்தலால், பெண் மக்களுக்குச் சைவசமய நூல்களையும் நல்லொழுக்கங் களையும் அறிந்தோர் வாயிலாகக் கற்பித்து வருதல் வேண்டும். ஆண்பிள்ளைகள் மற்றக் கல்வியோடு சைவசமய உணர்ச்சியும் பெற்றுவரும்படி கல்விச்சாலைகள் ஆங்காங்கு திறப்பித்து, அதனைச் செவ்வையாகப் புகட்டி வருதல் வேண்டும். தேவார திருவாசகங்களுக்குப் பொருள் தெரிந்து கொள்வதோடு, இனிய குரலில் அவற்றை இசையுடன் ஓதுதற்கும் ஒவ்வொரு வரும் பழகிக்கொள்ளுதல் வேண்டும்.

இனி, ஓர் உயிரைக் கொலை செய்யாமையுங், கொன்று அதன் ஊனைத் தின்னாமையுஞ் சைவசமயத்திற்குச் சிறந்த அறமாய் இருத்தலால், எல்லாருஞ் சீவகாருணிய வொழுக் கத்தைக் கைப்பற்றி யொழுகும்படி எவ்வெவ் வகையால் முயற்சிசெய்தல் வேண்டுமோ அங்ஙனமெல்லாஞ் செய்து அதனை எங்கும் பரவச் செய்தல் சைவர்க்கு இன்றியமையாத கடமையா யிருக்கிறது.

இனித், தமிழ்மொழியின் அமைப்பும் அதன் இயற்கை யுஞ் சைவசமய உண்மையோடு மிகவும் ஒன்றுபட்டிருத்த லால், அதனை எல்லாரும் நன்றாகக் கற்று வேறுமொழிக் கலப்பில்லாமற் செவ்வையாகப் பேசவும் எழுதவும் அதிற் புதிய புதிய நல்லநூல்கள் இயற்றவும் பழகிக் கொள்ளுதல் வேண்டும். தமிழ் அல்லாத மற்றமொழிகளில் வருத்தப்பட்டுச் சொல்லுஞ் சொற்களுஞ், சினந் துன்பம் வந்தாற் பிறக்கும் உரத்த ஓசைகளும் இளைத்த ஒலிகளும் நிரம்பிக் கிடத்தலால் அவையெல்லாஞ் செயற்கை மொழிக ளென்றுந், தமிழில் வருத்தமின்றி இயல்பாற் பிறக்குஞ் சொற்களே நிறைந்து சினத்தாற் பிறக்கும் வெடுவெடுப் போசையுந் துனபத்தாற் பிறக்கும் இளைப்பொலியும் இன்றி, எல்லாம் இனிய

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/311&oldid=1591281" இலிருந்து மீள்விக்கப்பட்டது