உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

❖ - ❖ மறைமலையம் – 27

களை நினைந்தவராகி அகங்குழைந்து உருகுவர். ஆண்ட வனதருளுருவத்திற்குச் செய்யும் எண்ணத்துடன் தம் அன்பினாற் பூவும் நீரும் இட்டு ஆடையணிகலன்கள் சாத்தி அவ்வடிவங் களை வணங்குதலும் அவ் அன்பிற்கு அடையாள மாகும். இறைவனருளைப்பெறுதற்கு ஞானமும், அதன்வழித் தோன்றும் பேரன்புமே வாயில்களாதலாலும், இக்காலத்தில் மக்களிற் பல்வகைக் கூட்டத்தாரும் அறிவைப் பெருகச் செய்து, அறிவாலும் அன்பாலும் ஆண்டவனை அடைதற்கு மிக முயன்று வருதலாலுஞ் சைவசமயிகளான அறிஞரும் ஞானநெறியிற்றமது கருத்தை மிகுதியாய்ச் செல்லவிடுதல் வேண்டுமே யல்லாமல், வெறுங் கர்மநெறியிற் புகுந்து ஒப்பனைகளின் பொருட்டுந் பொருட்டும் ஆயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் போட்டி போட்டுக் கொண்டு பொருள்களைச் செலவழித்துச் செருக்கடையலாகாது.எல்லா உலகங்களையும் எல்லாப் பொருள்களையும் உடைய பெருஞ்செல்வரான நம் ஆண்டவனுக்கு ஏழை மக்கள் நல்ல அல்லா வழிகளில் ஈட்டிய பொருளைத் திரள்திரளாகக் காடுத்தாலும், அவன் அதனைக்கண்டு ஏமாறித் தனது அருளைக் கொடுத்து விடுவான் அல்லன். நம் ஐயனுக்கு வேண்டுவன அன்பும் அன்பொழுக்க முமேயாகும். அதுபற்றியன்றோ திருநாவுக் கரசு நாயனாரும்,

திருவிழாக்களின்

நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே

என்று அருளிச் செய்தனர்.

ஆதலால், திருக்கோயில்களுக்குச் செய்யுஞ் செலவை இயன்றமட்டுஞ் சிறுகவே செய்து, மிச்சப் பெரும் பொருளைச் சிவஞான வளர்ச்சிக்குஞ், சிவஞானிகட்கும், பழுது பட்ட கோயில்கள் சத்திரங்கள் குளங்கள் சோலைகள் பாட்டைகள் முதலியவற்றின் திருப்பணிகட்குஞ் செலவு செய்து சைவர்கள் எல்லாருஞ் சிவபெருமான் திருவருளைப் பெறுவார்களாக!

சைவ சமய பாதுகாப்பு முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/313&oldid=1591283" இலிருந்து மீள்விக்கப்பட்டது