உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

பிரசண்ட மாருதம்

மெய்ஞ்ஞானபுரம்,

திருநெல்வேலிச் சாணாரைக் குறித்துக் கால்டுவெல் பிஷப்பு அவர்கள் எழுதிய உண்மை வாசகத்தால் சற்குண ரென்பவர், மயங்கி, கலங்கி, தியங்கி இன்னது செய்யலாம் இன்னது தவிர்க்கலாம் என்பதைச் சிறிதும் உற்று நோக்காது மண்ணுலக கற்பகவிருக்ஷங்களாகிய பனைகளிலே காலை யிலும் மாலையிலும் ஏறியிறங்குந் திருநெல்வேலிச் சாணார மூர்த்திகளுள் அநேகரை, அவ்வாறு ஏறி யிறங்கி வருத்த முறாது.... தூத்துக்குடி, நாசரேத், பாளையங் கோட்டை, சாயர்புரம், நல்லூர் முதலிய தானங்களிலே ஸ்தாபிக்கப்பட்ட தமிழ், இங்கிலீஷ் வித்தியா சாலைகளிலே படித்தும், பனைமரங்களில் ஏறியிறங்கும் போதெல்லாம் கால்களிலே இட்டுக்கொள்ளும் தளைகளை விடுத்து..... நாற்காலி முதலிய ஆசனங்களிலே வீற்றிருந்து புஸ்தகங்கள் படிக்கவும் காகிதங்கள் எழுதவும், வாசிக்கவும் செய்தும் இடுப்பிலே இறுக்கிப் பூட்டப்பட்ட சுண் ணாம்புப் பெட்டியையும் கள்ளுக் குடுவையையும் விடுவித்து அவ்விடுப்புகளிலே தரிப்பதற்கு உயர்ந்த விலை யுள்ள நல்ல வஸ்திரங்களை உடுக்கக் கொடுத்து சோனை யிருளையும் ஓட்ட வல்ல பிரகாசமாகிய (கோதுடை) பாரமாகிய கத்திகளைப் பாளை சீவும் போதும், நுங்கு சீவும் போதும் கைகளிலும் மற்றைக் காலங்களிலே பின் கச்சைகளுள்ளும் வைத்தலைத் தவிர்த்துக் காகிதங்கள் வெட்டவும் பேனா திருத்தவும், திருத்தியபின் சட்டையிலே வைக்கத் தகுந்த மிக்க மிருதுவாகிய பாரமற்ற பேனாக் கத்திகளை எடுத்தும் ஏறியிறங்குங் காலங்களிலெல்லாம் பனைமர மட்டைகளும் பனஞ் சிலாம்புகளும், நெஞ்சு களையும் கால்களையும் உரோஞ்சி வருத்தா வண்ணம் பூட்டப் படுகின்ற தோற்பரிசை களையெல்லாம் நீக்கி

பூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/315&oldid=1591285" இலிருந்து மீள்விக்கப்பட்டது