உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

1. சைவ சமய மாட்சி

இந்நிலவுலகத்திலே பரந்து விரிந்து கிடக்கும் எண்ணிறந்த மக்கட் பகுப்பினராலும் எண்ணிறந்த வகை யவாக வைத்துக் கைக்கொள்ளப்பட்டு வருஞ்சமயங்கள் அல்லது மதங்கள் எண்ணிறந்தனவாய் இருக்கின்றன. அவைகளுள்ளே நமது சைவ சமயமும் ஒன்றாயிருக்கின்றது. நம்முடைய அனுபவத்திற்கு அகப்பட்ட மதங்களையும் சைவ சமயத்தையும் இரண்டு பக்கத்தே வைத்து நாம் நடுநின்று நிறுத்துப் பார்க்குமளவில் நமது சைவ சமயமே அவ் வெல்லா மதங்களினும் பெருமை மிக்கதாய்க் காணப் படுகின்றது. இனி நமது அனுபவத்தில் வராத வேறு மதங் களில் ஏதேனும் சைவ சமயத்தை ஒத்ததாகவேனும், அல்லது அதனின் மிக்கதாக வேனும் இருத்தலாகாதோ வென்றால், அதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். ஏனைய மதங் களில் ஏதேனும் ஒன்று சைவ சமயத்தின்கட் காணப்படும் எல்லாக் கொள்கைகளும் உடையதாய் இருக்குமாயின், அது பெயரால் வழங்கப்படுமாயினும் கொள்கைகளிற் சிறிதும் வேறுபடா மையால் அதனையுஞ் அதனையுஞ் சைவ சமய மென்றே கோடல் இழுக்காகாது. இனி அப்பிற மதங்களுள் ஏதேனும் ஒன்று சைவ சமயத்தில் இல்லாத அரிய பெரிய கொள்கைகள் உடையதாய் இருத்தலும் ஏலாத தொன்றாம்; என்னையெனின், உலகத் திலுள்ள எல்லா மதங்களும் ஒரே முழுமுதற் அறிவுப் பொருளாகிய கடவுளையும், சிற்றறி வுடைய உயிர்களையும், அறிவில்லாத உலகத்துச் சடப் பொருள்களையும் ஆராயும் முத்திறப்பட்ட ஆராய்ச்சி யில் அடங்குவனவே யல்லாமல், இம்மூன்றில் அடங்காத ஒரு மதம் எங்கும் இல்லை யென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தேயாம், இவ்வுண்மை கடைப்பிடித்தே.

வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/44&oldid=1591013" இலிருந்து மீள்விக்கப்பட்டது