உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் - 27

சான்றவ ராய்ந்திடத் தக்க வாம் பொருள் மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொல்பதி யாருயிர்த் தொகை

வான்றிகழ் தளையென வகுப்ப ரன்னவே

என்னுந் திருமொழியும் எழுந்தது. கடவுள் உலகம் உயிர் என்னும் இம் முப்பொருள்களையும் பற்றி எழுந்த பல திறப்பட்ட கொள்கைகளும், அக்கொள்கைகள் எல்லா வற்றையும் பற்றிய ஆராய்ச்சிகளும், அவற்றுட் பொருந்துவன வை பொருந்தாதன இவை என்னும் பகுத்தறிவு நிகழ்ச்சியும், பொருந்துவனவற்றைத் தெளித்துரைத்து உண்மை முடிபு காட்டுஞ் சித்தாந்தமும் ஆகிய இவையெல்லாம் நமது சைவ சமயத்தின் கண்ணே விளங்கிக் கிடத்தலால், எல்லா மதங்களும் நமது சைவ சமயத்தின் கண்ணே அடங்கத், தான் எதினும் அடங்காததாய் வீறி நிற்றலில் சைவ சமயம் ஒன்றே எல்லாவற்றினுஞ் சிறந்த உண்மை மதமாமென்று நாட்டப் படும்; இது பற்றியே தாயுமான சுவாமிகளும்,

இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி யாதுசமயமும் வணங்கும் இயல்பதாகி

என்றும்,

CC

ராசாங்கத்தில்

அமர்ந்தது

வைதிகசைவ

மழகிதந்தோ” என்றும், “சைவசமயமே சமயம்” என்றும் அருளிச் செய்வாராயினர்.

.

னிச் சைவ சமயமே எல்லாச் சமயங்களினும் மேம் பட்ட சிறப்புடைத்தாம் என்பதனை ஒரு சிறிது வகுத்து ஆராய்ந்து பார்ப்போமாக. முதலாகக் கடவுளைப் பற்றி ஆராய்ந்தறிந்த வகையிலும் அம்முழு முதற் பொருளுக்குப் பெயர் வைத்து வழங்கும் முறையிலும் சைவ சமயமே ஏனை எல்லாச் சமயங்களினும் மேம்பட்ட சிறப்புடைத்தாய்ப் பொலிகின்ற தென்பதனை மட்டும் ஈண்டு எடுத்துக் காட்டு வாம். சிற்றறிவுடையனவாய் உலகத்தின்கட் காணப்படும் எல்லா உயிர் வகைகளும் துன்பத்தை விலக்கி இன்பத்தைப் பெறும் முயற்சி ஒன்றிலே மட்டும் கருத்தூன்றி நிற்கின்றன. உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதன்முதல் அனுபவத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/45&oldid=1591015" இலிருந்து மீள்விக்கப்பட்டது