உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் 28

வழங்கப்பட்டு வருதலல் லாமல், இவ்வியக்கத்தின் வேறாத் தனித்தொரு முதற் பொருளாய் அஃதியாண்டும் எவரானும் அறியப்பட்ட வாறில்லை. இஞ்ஞான்றை மேற்றிசை யறிஞர் இயற்றிக் கொணர்ந்த கடிகாரப் பொறியும், பண்டைக் காலத்துத் தமிழ்மக்கள் இயற்றி வழங்கிய நாழிகை வட்டிலும் கோள்கள் உடுக்கூட்டங்களின் உதவியை அவாவாதும் நாம் காலத்தை அளந்தறிதற்குரிய கருவிகளாம். இவ்வாறு இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் என்னும் இவற்றின் இயக்கங் களைக் கருவியாகக் கொண்டு குறித்து ணரப் படுவதன்றி இவற்றின் வேறாகக் காலமென்பது சிறிதும் அறியப்பட்ட தொன்றன்றாம். ஞாயிறு நேற்றுத் தோன்றி மறைந்த காலவெல்லையை இறந்த காலமென்றும், அஃது இற்றைக் காலையிற் றோன்றி நடந்து செல்கின்ற நாளின் L குதியை நிகழ்காலமென்றும், அது நாளைத் தோன்றி இயங்குவதான பொழுதை வருங்கால மென்றும் அக் காலத்தினை மூன்று கூற்றுட்படுத்து எல்லாரும் வழங்கி வருகின்றனர். இன்னும் இதனை நுனித்துக் காணுங்கால் ஒரு பொருள் ஓரிடத்தை விட்டுப் பிறிதோரிடத்திற்குப் பெயர்ந்து சல்லும் புடை பெயர்ச்சியே இயக்கம் எனவும், இவ்வியக்கத்தின் றொடர்ச்சியே காலம் எனவும் பகுத்தறிந்து கொள்ளல் வேண்டும். ஓர் ஊரினின்றும் ஏனையோர் ஊருக்குட் பாண்டில் ஈர்த்துச் செல்லும் பகட்டின் இயக்கத்தை உற்று நோக்குவார்க்கு, அது புறப்படும் இடம் முதற் போய்ச் சேரும் இடம் வரையிலுள்ள வழியும், அவ்வழியூடு செல்லும் பாண்டிற் பகடும் ஒரு கால அளவினைத் தோற்றுவித்தற்குரிய கருவிகளாந் தன்மை இனிது புலப்படும். அவ்வழி முழுவதனையும் பெருவிரல் அளவுள்ள இ டங்களாகப் பகுத்து வைத்துக் கொண்டு, அச்சிறிய இடம் ஒவ்வொன்றனையுந் தொட்டுத்தொட்டு முற்சென்ற பாண்டிற் பகட்டின் இயக்கத்தையும் பகுத்துப் பகுத்துக் காண்டுமாயின், அது தொட்டுக் கழிந்த இடங்கள் வாயிலாக உணரப்படுங் காலவெல்லை இறந்த காலமாய் முடியுமென்பதூஉம், அதனால் இனித் தொடப்படும் இடங்கள் வாயிலாக உணரப்படுங் காலவெல்லை வருங் காலமாகக் கருதப் படுமென்பதூம் தெளிதுமன்றே? இன்னும் இதனை விளக்கிக் காட்டலுறின்; அப்பாண்டிற் பகடு சென்ற வழி பன்னீராயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/107&oldid=1591436" இலிருந்து மீள்விக்கப்பட்டது