உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

81

செயல்கள் சிறிது விளங்குமாறு செய்வதோடு ஒரோவழி அவற்றை மயக்குதலுமுடைத்து. இருவினைகளைச் சார்ந்து நிற்குங் காறும் ஆன்மாக்கள் அவற்றோடொத்து இன்ப துன்பங் களிற் பட்டுழலும்; ஆணவமலத்தைச் சார்ந்துநிற்கும் காறும் தம்மியல்பெல்லாம் ஒருங்கே மறைக்கப் பட்டுக் கற்போற் கிடக்கும்; மாயையைச் சார்ந்துநிற்குங் காறும் தஞ்செய லறிவு வேட்கைகள் ஒருபுடை விளங்கப் பெற்று மயங்கும்; எல்லா அறிவுமுடைய ய கடவுளைச் சார்ந்த வழி அதனியல் போடொத்து முழுதும் தம்மறிவிச்சை செயல்கள் விரிந்து திகழப் பெறுவனவாம். ஆகவே, சிறுபான்மை அறிவிச்சை செயல்களை விளக்கும் மாயாதத்துவங்களைச் சார்ந்து நிற்கும் வரையும் உயிர்கள் சிறுபான்மையே அவை விளங்கப் பெற்று ஏனைப் பெரும்பான்மை மயக்கமுற்றே போதரும். எனவே, பேரறிவினைப் பயப்பிக்கும் கடவுளை அணுகு தற்கே வேட்கையும் முயற்சியும் உடையவாய், மாயா தத்துவங்கள் தமது நோக்கம் முற்றுப் பெறுதற்கு உதவியாக வாய்த்த துணைக்கருவிகளேயல்லாமல் அவை தாமே தமக்குப் பேரறிவினையும் பேரின்பத்தினையும் பயவாவாக லான், உயிர்கள் அவற்றின்கட் சிறிதும் பற்றுவையாதனவாய் ஒழுகல் வேண்டுமென்பதும் தானே போதரும் என்க. உயிர்கள் இங்ஙனம் மாயா தத்துவங்களிற் பற்றுவையாது அவற்றின் பெற்றிகளைப் பகுத்தறிந்தொழுகத் தலைப் படுமாயின் அவை அவற்றான் மயக்கமுறா. இவ்வாறு பகுத்தறிந்தொழுகு நன்முறையை விடுத்து இத்தத்துவங்களையே தமக்கினிய உறுபெரும் பொருளாக நினைந்து அவற்றின்கட் பற்று நனி வைத்து ஒழுகுதலானன்றே. அவை அவற்றி னியற்கையைத் தாமும் பெற்று மயங்கி மயங்கித் திரிதருகின்றன வென்க. அது கிடக்க.

னிக் கலை வித்தை அராகம் முதலான இத் தத்து வங்கள் மாயையினின்றுந் தோன்றினாற் போலவே காலம் நியதி யென்னும் வேறிருதத்துவங்களும் அதன்கட்டோன்றா நிற்கும். அவ்விரண்டனுட் காலம் என்னுந் தத்துவ இயல் பினை முதலில் ஒரு சிறிது விரித்துரைப்பாம். உலக வொழுக் கத்தின்கட் காலம் என்பது ஞாயிறு திங்கள் முதலான கோள்கள் உடுக்குழாங்கள் என்னும் இவற்றது இயக்கத்தான் அளந்தறிப் படுவதொன்றாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/106&oldid=1591435" இலிருந்து மீள்விக்கப்பட்டது