உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் - 28

அரிதற்குக் கருவியான மள்ளர் கையிற் றரப்பட்ட அரிவாள் அவர்தம்முட் சினந்து மலைந்த வழி அவர் தம்முடம்பைச் சிதைத்தற்குங் கருவியாதல் கண்டாமன்றே! பைங்கூழை வளர்த்தற்குதவியாகப் பெருகும் நீர் தன் அளவின் மிக்குப் பெருகுமாயின் அதுவே அப்பைங் கூழினை அழித்தலுங் காண்டுமே! ஒளிதருதற்கும் உணாப் பொருள் அடுதற்கும் வாய்த்த தீயே ஊரை எரித்தற்கும் உடம்பைச் சுடுதற்கும் முனைவ துண்மையன்றே! எவ்வுயிரும் உடம்பின் நிலைபெறுதற்கு இன்றி யமையாததான வளி தன்னிலை திரிந்து கடுகி யியங்குமாயின் எவ்வகைப் பொருளையும் நிலைதிரித்துச் சிதைத்தலும் ரோவொரு கால் நிகழ்தல் அறிந்தாமே. இருந்தவாற்றால் தம் அறிவிச்சை செயல்களின் விளக்கத்திற்குக் காரணமாம் கலை வித்தை அராகம் என்னுஞ் சூக்கும தத்துவங்களோடு பொருந்திப் பின்னர் அவ்வுயிர்கள் பிரகிருதி தத்துவங்களோடு இயைந்து பொருள்களை நுகரும் வழி அவற்றின் சேர்க்கையால் ஓரோ வழிப் பிறக்கும் மயக்கவுணர்வின் பாற்பட்டு அவை மயங்கு தலும் இயல்பேயாமென்க. ஆதலினாற்றான் உயிராண்மை முனைத்து நிற்றற்கேதுவாகிய புருட தத்துவம் சித்துப் பாருளே யாயினும், அஃதில்லாச் சடப்பொருளே போல் வைத்து வித்தியாதத்துவங்களுள் ஒன்றாக எண்ணப்படுவ தாயிற்று.

அஃதங்ஙனமாயினும், இத்தத்துவங்களான் விளங்கிய அறிவுடைய உயிர் பெயர்த்தும் அவற்றான் அவ்வறிவு மயங்குதறான் என்னையோ வெனின் கூறுவாம். உயிர்கள் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய பளிங்குபோல்வன மாம். ஆனதனால் அவை எவ்வெப் பொருள்களைச் சார்ந்து நிற்கின்றன, அவ்வப் பொருட் டன்மைகளைத் தாம் எளிதிலே பற்றிக் கொள்ளா நிற்கும். இனி இவ்வுயிர்களாற் சாரப்படுவன முழுமுதலறிவுப் பொருளாகிய கடவுளும், இருவினைகளும் ஆணவமலமும், மாயையுமேயாம். இவற்றுட் கடவுள் தன்னைச் சாரும் உயிர்களைத் தன்போல் முற்றறிவுடையனவாய் விளங்கச் செய்யும்; இருவினைகள் இன்ப துன்பங்களின் நுகர்ச்சியை அவைகள் மாட்டு விளைவிக்கும்; ஆணவமலம் உயிர்களின் அறிவிச்சை செயல்கள் சிறிதுங் காணப்படாவாறு அவற்றை முழுவதும் மறைத்து நிற்கும்; மாயை உயிர்களின் விழைவறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/105&oldid=1591434" இலிருந்து மீள்விக்கப்பட்டது