உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

79

பெயர் பெறாநிற்கும். அறிவிச்சை செயல்கள் விளங்கப் பெற்ற ஆன்மாவே புருடதத்துவமென் றோதப்படுமாயின், பிரகிருதிக்கு மேல் எண்ணப்பட்ட வித்தியாதத்துவங்கள் ஏழனுள் இதனையும் ஒன்றாக வைத்தெண்ணிய தென்னை யெனின்; கலை வித்தை அராகங் களாற் றொழிலும் அறிவும் வேட்கையுந் தோன்றப் பெற்ற உயிர் மூலப் பகுதி முதலாகக் கீழ் நின்ற ஏனை இருபத்து நான்கு தத்துவங்களோடுங் கூடி நின்று போகநுகருமிடத்து அம்மூலப் பகுதியின்கண் ரோ ஒருகாற்றோன்றும் மயக்கவுணர்வான் மயங்கி அறிவில்லாச் சடப்பொருள் போல் நிற்றலும் உண்மையால் அஃதங்ஙனம் புருடதத்துவ மென்றுரைக்கப்படுவதாயிற்று; அத்துணையே யன்றி இப்புருட தத்துவம் ஏனையபோல் வெறுஞ் சடப் பொருளன்று. விழை வறிவு செயல்கள் விளங்கியவழித் தானும் ஓர் அறிவுப் பொருளெனக் காட்டுதலானன்றே அவ்வுயிர் புருட தத்துவ மெனப் படலாயிற்று; அஃதவ்வா றாக, அவற்றை இழந்து அஃதொ ரோவழி மயங்குதலானும் அப்பெயர் பெறலாயிற்றென முன்னேதுவொடு மாறுகோளுறும் வேறோர் ஏதுக்கூறுத லென்னையெனின்; அறிவிச்சை செயல்கள் விளங்குதற் கேதுவாகிய தத்துவங் களே ஒரோவழி அவற்றை மயக்குதலுஞ் செய்து போதரல் அனுபவத்தான் அறியக் கிடத்தலின், அத்தத்துவவியல்பு பற்றி அவற்றோடி யைந்து நிற்கும் ஆன்மாவும் இருவேறியல்பின தாவதைத் தெரித்ததே யன்றி, முற்கூறிய வேதுவொடு பிற் கூறியது மாறுபட வைத்ததன்று. ஓர் அழகிய வாவியிலே பளிங்கு போற்றெளிந்து நிற்கும் நீர் கரைமருங்கே யுள்ள மரஞ்செடி கொடிகளின் வடிவத்தைத் தெளிவுபெறக் காட்டுமாயினும், அந்நீர் காற்றால்

அலைக்கப்பட்டு அசையுங்கால் தன்கட் டோன்றும்

வடிவங்களைத் தானும் அலைத்து விகார முறுத்தல்போல,

ஆன்ம ஞானம் முதலியன விளங்குதற் கேதுவாகிய

இக்கருவிகளே ஒரோவழி அவை விளங்காமற் றடை செய்து உயிரைக் கட்டுறுத்துதலும் உடையவாம். இன்னுஞ் செப்புக் கலமொன்றனைத் தேய்த்து ஒளிபெறச் செய்யும் புளி சாம்பற்பொடி முதலியன நீராற் கழுவப்படாமல் அதன் மேலிருக்குமாறு விடப்படின், ஒளிதுலக்கிய அவையே அவ்வொளியினை மலக்குதலுங் காண்டுமன்றே! நெற்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/104&oldid=1591433" இலிருந்து மீள்விக்கப்பட்டது