உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  • மறைமலையம் - 28

தாடர்புற்று நிகழ அதனால் அம்மகவு பின்னர்ச் சில நாளிலெல்லாம் பால் பருகுதற்கண் விழைவு மிகுதியுமுடைத் தாய்ப் போதரு கின்றது, பிறந்த சின்னாள் காறும் நினைவும் விழைவுமின்றி அழுது பாலுண் முயற்சி மாத்திரம் உடையதாயிருந்த இளங்குழவி அச்சின்னாளுங் கழிந்த பின்னர்ப் பால் பருகுதற்கண் விழைவு முடைத்தாதலை உற்று நோக்க வல்லார்க்கு, இது தனக்கு முற்றோன்றிய நினைவினடி யாகவே வரலாயிற் றென்னு முண்மை இனிது விளங்கா நிற்கும். தனக்கு முற்றோன்றிய முயற்சிக்கும் நினை விற்கும் அவ் விரண்டனையும் எழுப்புங் கலையும் வித்தையும் துணைக் காரணங்களாய் உயிருடன் விரவிநின்றாற் போல போல வே, இவ்விழைவுந் தன்னைத் தோற்று வித்தற்கு ஒரு கருவியினை இன்றியமையாது வேண்டி நிற்கும். அக்கருவி தான் யாதோ வெனின், அதுவே அராகதத்துவம் என்று ரைக்கப் படுவதாகும். இச்சை எனப் பொருள்படுவதாகிய ராக எனும் வடசொல் தமிழில் அகரச்சாரியை முதற் பெற்று அராகம் என வழங்குவ தாயிற்று. பொருணுகர்ச்சிக்கண் உண்டாம் வேட்கையை உயிர்கண்மாட்டு விளைவித்து நிற்றலின் இஃது இப்பெயர் பறுவதாயிற்று. இவ் வேட்கையை எழுப்புஞ் செயல் ஏனைப் பிரகிருதி தத்துவங் களிடத் தில்லையென்பது மேற் போந்த ஆராய்ச்சியுள் இனிது காணக் கிடந்தமையின், இஃதிவ்வராக தத்துவத் திற்கே உரிய சிறப்பியல்பா மென்று ணர்ந்து கோடல் வேண்டும், இனி இவ்வேட்கையும் பொருட் டன்மைகளை நினைவு கூரும் நினைவறிவின் பின்ன பின்ன தாயன்றி எழக் காணாமையின், இதனைத் தோற்றுவிக்கும் அராகம் அந்நினைவறிவினைப் பயப்பிக்கும் வித்தியாதத்துவத் தினின்றே பிறக்கு மென்பதூஉம் பெற்றாம்.

ள்

இவ்வாறு அராகம் வித்தையினும், வித்தை கலையினு மாகத் தோன்றித் தொன்றுதொட்டே ஆணவமலத்தான் மறைக்கப்பட்டிருந்த ஆன்மாக்களின் இச்சாஞானக் கிரியை களை அவ்வாணவமலத் தடையினின்றுஞ் சிறிது விலக்கி மேலெழச் செய்து விளக்கும் வகை அறியற்பாற்று. இவ்வாற்றாற் றன்விழைவறிவு செயல்கள் விளங்கப் பெற்ற உயிர் பொருணு கர்ச்சிக்கண் முனைந்து நிற்புழி, ஆங்கது புருடதத்துவமெனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/103&oldid=1591432" இலிருந்து மீள்விக்கப்பட்டது