உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

77

கருவியான வித்தியா தத்துவத் தொழில் எஞ்ஞான்றும் இவ் வுடம்பின் கண் உளதென்பதே தெளிந்த முடிபாம்.

அஃதொக்குமாயினும், இந் நினைவு மனமென்னுந் தத்துவத்தின் றொழில் போல வைத்து "மனமது தைசதத்தின் வந்தொரு பொருளை முந்தி நினைவதுஞ்செய்தங்கைய நிலைமையின் நிற்கு மாங்கே” எனச் சிவஞான சித்தியாரின் கண் ஓதப்பட்டவாறென்னை யெனின்; நன்று கூறினாய், ஆண்டு ஓதப்பட்ட முந்தி நினைவதுஞ்செய்வதாகிய மனத்தின் றொழிலாவது ஐம்பொறி வாயிலாக எதிர்ப் பட்டதொரு புறப்பொருட் குணத்தை முன்னர்ச் சென்று பற்றியறி தலையே யாகலின், முன் நிகழ்ந்ததனையும் பின் நிகழ்வதனையும் இணைவிப்பதான வித்தியா தத்துவத்தின் விளைவாகிய நினைவு அதனின் முற்றும் வேறாவதாமென்று பகுத்துணர்ந்து கொள்க; ஈதுணர்த்துதற் பொருட்டன்றே ‘நினைவதுஞ் செய்து’ என வாளாவோதாது, 'முந்தி நினைவதுஞ் செய்து' என அடை கொடுத் தோதியதூஉ மென்க. பிறந்த மகவின் மாட்டு ஐம்பொறிகள் இருந்தும் அவை யுணர்வோடு கூடி இயங்காமை தேற்றமாகலானும், ஐம்பொறிகள் உணர்வின்றிக் கிடப்பவே அவ்வுணர்வுக்குக் காரணமாம் மனமும் ஆண்டு இயக்க மின்றிக் கிடக்கு மென்பது பெறப்படுமாகலானும் மனத்தின் றொழி லான பற்றுதல் நினைவு வித்தியா தத்துவத்தொழில் நினை வுக்குக் காரணமாகாமையும் உணர்க; மற்று வித்தியா தத்துவத் தாழில் நினைவான் உந்தப்பட்டே ஏனை மனம் புத்தி முதலான தத்துவங்களும் தொழிற்படு மென்க.

அத்துணையும்

இனி, முற்பிற்படும் நிகழ்ச்சிகள் நினைக்கும் நினைவு வலிபெற வலிபெற அந்நினைவின் வழித் தாகப் பொருள்களை நுகருதற்குரிய விழைவு உயிர்களிடத்துத் தோன்றா நிற்கும். இவ்வியல்பும் பிறந்த மகவின்பாற் காணப்படும் நிகழ்ச்சிபற்றித் துணியப்படும், கலாதத்துவத்தால் முதன்முதல் முயற்சியுடைத்தாகிய மகவு அழுது பாலுண்ணா நிற்கின்றது; இவ்வழுது பாலுண் முயற்சி பசியெடாதவழித் தோன்றாதாகலின், இப்பசியுங் கலாதத்துவத்தின் செயலேயா மென்பதும் ஈண்டே பெறு தும். இனிப் பசித்தழுது பாலுண்ணுந் தோறும், முன்னும் பலகால் இங்ஙனமே பால் பருகிய நினைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/102&oldid=1591431" இலிருந்து மீள்விக்கப்பட்டது