உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் - 28

தோற்றுவிக்குமென்றே

ன்

இவ்வித்தியா தத்துவம் அம்மகவு பருவமுதிர்ந்து கட்டிளை யோன் ஆயவழி, தன் செயல் இழந்து அவன் மாட்டு ஒடுங்கி நிற்குமென்று கோடுமோ, அன்றி அஃது ஆண்டுந் தன்றொழில் கோடுமோவெனின்; நன்று வினாயினாய், பருவ முதிருந்தோறும் அவ்வித்தியா தத்துவத் தொழிலும் உடன் முதிர்ந்து தன்னாற் றோற்று விக்கப்படும் நினைவினைப் பெரிதும் உரம்பெறச் செய்து நிற்கும். உற்று நோக்குங்கால் முன் நிகழ்ந்ததனையும் பின் நிகழ்வதனையும் ஒன்று பிணைய இயைவித்து ஆன்ம அறிவில் நிலைப்பிக்கும் நினைவின் செயல் இல்லையாயின், உயிர்க்கு அறிவென்பதே இல்லையாய் ஒழியும். குழவிப் பருவந் தொட்டே இந்நினைவு, அறிவுகளையும் உணர்வு களையும் ஒரு தொடர்பு படுத்து நிலைப்பித்து வருதலி னாலன்றே, ஒருவன் தன்னை இன்னான் என்றும் தான் இத்துணையறிந்தவன் என்றும் உணரப் பெறுகின்றான். இந் நினைவு எவனிடத்து வலிகொண்டு நிற்குமோ அவன் கலைஞான வுணர்ச்சியும் நுண்ணறிவுஞ் சான்றவனாய், எவரானும் இவன் பேரறிவன்!' என்று புகழ்ந்தேத்தப் படுகின்றான். இஃது எவன்பாற் குறைவுபட்டு நிற்குமோ, அவன் பொச்சாப்பு மிக்குக் கற்பவற்றை நினைவு கூர மாட்டானாய் அறியாமையாற் பற்றப்பட்டு எல்லாரானும் இகழப்படுகின்றான். அல்லதூஉம், பித்தன் என்போன் யாவன்? நினைவு திரிபெய்தப் பெற்றவன் அல்லனோ? முன் பின் நிகழ்ந்தவை நினைவினால் ஒரு வரிசைப்பட நிறுத்தப் படாமற் பிறழ்ந்து சிதறிக்கலைய, ஏதும் நினைவின்றி மருண்டு பேதுற்றுக் கலங்குவதே பித்துக் கொண்டோன் இயற்கையாகும்; முன் நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சியுள் ஓரிறைத் துணையும் பின் நாளில் நினைவு கூரப்பெறாது தன்னையே மறந்து திகைப்பவனை எல்லாரும் பித்தனென்றழைத்தல் காண்டுமாகலின், உயிரின் அறிவு நிகழ்ச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் இந் நினைவு இன்றியமை யாக் காரணமா மென்க. ஆகவே, குழவிப் பருவத்தே இவ் வித்தியா தத்துவத்தான் உந்தப்பட்டு எழுந்த நினைவு, ஏனைப் பிள்ளைப்பருவத்தும் இளம் பருவத்தும்

6

ஆண்மைப் பருவத்தும் முறை முறையே முதிர்ந்து

திகழுமாகலான், அந் நினைவினியக் கத்திற்கு ஓர் அருந்துணைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/101&oldid=1591430" இலிருந்து மீள்விக்கப்பட்டது