உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

75

வ்

பரந்து திகழும் உயிரின் ஆராய்ச்சியுணர்வுக்கு அடிக்காரண மாய், உயிரின்கண் அறிவினை முதன்முதல் எழுப்புவது வித்தியா தத்துவத்திற்கே யுரிய சிறப்பியல்பாமென்று ஓர்க. மகப்பிறந்த சின்னாள்காறும் அடுத்தடுத்து நிகழும் முயற்சி யனுபவத்தின் பயனாக அம் மகவு தான் அன்னை கையேறு தலும் அழுகை தீருமாற்றை உற்றாராயுங்கால், ஆண்டதற்குப் பசிப்பிணி தீர்ப்ப திதுவெனத் துணிபறிவு தோன்றுமுண்மை புலப்படுதலின் அது புத்தி தத்துவச் செயலேயாதல் இனிது விளங்குமாலோ வெனின்; அறியாது கடாயினாய், ஆண்ட தன்னகத்தே நிகழ்வது பசிநோய் எனவும், அந்நோய் தீர்க்கு மருந்து பால் எனவும், அப்பாலையூட்டித் தன்னை மகிழ்விப் பாள் தன்னை ஈன்றாளே எனவும் இவ்வாறெல்லாம் அறியு மாயினன்றே அதன்கட் டுணிபறிவு தோன்றிய தென்றும் அதனைத் தோற்றுவித்தது புத்தி தத்துவமென்றும் உரைத்த லாம்? அங்ஙனமெல்லாம் பாகுபடுத்தறியும் அறிவு அதன்பால் இல்லையென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அது பொருத்தமாதல் யாண்டையதென்க. அற்றேல், அம் மகவின் மாட்டுத் தோன்றும் அவ்வறிவின் இயல்பு தான் யாதோவெனிற் கூறுதும், பசியெடுத்து அழுந்தோறும் அதன் அன்னை அருகே சன்று பாலூட்டும் நிகழ்ச்சி அடுத்தடுத்து நிகழ்தலின், முன் நிகழ்ந்ததனையும் பின் நிகழ்வதனையும் இசைவிப்பதான நினைவு வடிவாய் நடைபெறுதலே அவ்வறிவின் பெற்றியா மன்க. எல்லா அறிவுகளும் எல்லா உணர்வுகளும் ஒரு தாடர்புபட்டு நிற்றற்கு ஒரு பெரு நிலைக்களனாயுள்ளது நினைவறிவேயாதல் எல்லாரானுந் தெளியப்பட்ட முடிபாதலி னாலும், அந் நினைவறிவைப் பிறப்பிப்பது புத்தி தத்துவச் செயலன்மை சாங்கியத்தானும் சைவ சித்தாந்தத் தானும் இனிதுணரக் கிடத்தலினாலும், அவ்வவ்வறிவுகளையும் உணர்வுகளையும் தோற்றுவித்தற்கு அவ்வற்றோடியைந்த தத்துவக் கருவிகள் வேறு வேறாய் அமைந்தாற் போல இந் நினைவறிவைப் பயத்தற்கும் ஒரு கருவி இன்றியமையாது வேண்டப்படுதலினாலும் இதனை எழுப்புவது வித்தியா தத்துவமே யாதல் தெற்றெனத் துணியப்படும்.

அற்றேலஃதாக, பிறந்த மகவின்மாட்டுக் காணப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/100&oldid=1591429" இலிருந்து மீள்விக்கப்பட்டது