உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் 28

தாமத நிலைகளும் ஆண்டதன் கண் இல்லையாவது தேற்றப் பொருளேயாம். மற்று அதன்கட் டோன்றிய அழுது பாலுண் முயற்சி கலாதத்துவ இயக்கமே இயக்கமே யாதல் மேற் காட்டப் பட்டமையின், எஞ்சி நின்ற உறக்கம் எதன் காரியம் என்பது மாத்திரமே ஈண்டு ஆராயற்பாற்று. பிறக்குமுன் ஆணவத்தின் வயப்பட்டு அறிவிச்சை செயல்கள் ஒருங்கிழந்து கிடந்த உயிரினிலைக்கும், பிறந்த சில நாட்கள் வரையும் அங்ஙனமே அவை விளங்கப் பெறாது உறக்கத்தின் கட் கிடக்கும் மகவின் நிலைக்கும் வேறுபாடு ஒரு சிறிதுங் காணப்படாமையின், உறக்கத்தி லிருக்கும் மகவின் நிலை ஆணவவிருள் நிலையே யல்லாற் றாமதகுண நிலை யன்றென்பது கடைப்பிடிக்க. அல்லதூஉம், நான் எனும் உணர்வோடு கூடி நிகழாது உயிரின்கட் காணப்படும் நிகழ்ச்சிகளை அம் முக்குணகாரிய மென்றல் ஏலாமையும் மேலே இனிது விளக்கிப் போந்தாம். இங்ஙனம் அக் குழவியின் மாட்டு முக்குண நிகழ்ச்சியில்லை யாதல் ஐயுற வின்றி நிறுவப்படவே, அவற்றுட் சத்துவகுண ஏற்றத்தாற் றோன்றி இயங்கும் புத்தி தத்துவ நிகழ்ச்சியும் அதன்கண் இல்லை யென்பது தானே பெறப்படும். பெறப்படவே, பிறந்த மகவின் மாட்டுத் தோன்றுஞ் சிற்றறிவு நிகழ்ச்சிக்குக் காரணம் புத்திதத்துவ மன்றாதல் தெள்ளிதிற் புலப்படும்.

அற்றேலஃதாக, புத்தி தத்துவமும் உயிரின் அறிவு நிகழ்ச்சிக்குக் காரணம், வித்தியா தத்துவமும் அதனறிவு நிகழ்ச்சிக்குக் காரணம் என்று ஒன்றற்கே இரண்டு காரணங் காள்ளப்பட்டு வழுவாமாலெனின்; நன்று கூறினாய், இஃது இதனையொப்பது எனவும் இஃது இதனின் வேறு எனவும் ஒற்றுமை வேற்றுமை காணுமுகத்தால் ஒரு பொருட்டன்மை துணிவிக்கும் புத்தி தத்துவ இயல்பும், இங்ஙனமெல்லாம் பரந்தாராயும் வன்மையின்றி அறியாமை யிற் படிந்து கிடக்கும் பிறந்த மகவின்மாட்டுக் கனாவின் றோற்றம் போல ஓர் இழைந்த சிற்றறிவினைப் பயப்பிக்கும் வித்தியா தத்துவத்தின் இயல்பும் தம்மின் வேறு வேறாதல் தெளியக் கிடத்தலால் அவை யிரண்டும் ஒரே தன்மையவாங் காரணங்களாதல் யாண்டைய தெனக் கூறிமறுக்க. அற்றாயினும், புத்தி தத்துவ இயக்கத்தாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/99&oldid=1591428" இலிருந்து மீள்விக்கப்பட்டது