உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

73

அஃதன்றே வித்தை என்னும் தத்துவமாமென்பது; இஃது, அறி அறிவி எனப் பொருள்படும் வித் என்னுந் தாதுவிற் பிறந்த வித்யா என்னும் வடசொற்றிரிபான வித்தை என்னும் பெயராற் றமிழில் வழங்கப்படுவதாகும். ஆணவ இருளில் அழுந்தி ஏதுமே விளங்கப் பெறாது கிடந்த உயிர்க்கு முயற்சி யினை எழுப்பக் கலை யென்னுங்கரு வி வேண்டப்பட்டாற் ற் போலவே, அம்முயற்சியின் வழித்தாக முகிழ்த்த அறிவினைத் தோற்று வித்தற்கும் இவ்வித்தை என்னுந் தத்துவம் இன்றியமையாது வேண்டப்படும். அற்றன்று, மூலப்பகுதியின் குணதத்துவத்திற் றோன்றுவ தென்று மேலே குறிக்கப்பட்ட புத்தி தத்துவமே பிறந்த மகவின் மாட்டு அச் சிற்றறி வினையும் எழுப்புதற்கு வல்லுமாகலின், இதன் பொருட்டு வேறு மொரு கருவியினை அவாவுதல் அமையாதாலெனின்; அறியாது கடாயினாய்; குண தத்துவத்தின் பின்னதாய் அக் குணதத்துவத்திற் றோன்றி இன்னதிதுவெனப் பொருட்டுணிவு பெறுவிக்கும் புத்தி தத்துவம் அக்குணமே புலப்படாத குழவியின் மாட்டு வெளிப் பட்டு நின்று அச் சிற்றறிவினையும் பயப்பிக்கு மென்றல் பொருத்தமில் கூற்றாம். அற்றாயினும், பிறந்த மகவு ஏதுஞ் செயலின்றிக் கிடந்த நிலையே தாமதகுண தத்துவத் தொழிலென்றும், அது பசியால் உந்தப்பட்டு அழுதலும் பால் பருகுதலுமே இராசதகுணத் தொழிலென்றும் பாலுண்டபிற் சிறிது மகிழ்ந்து அமைதியாயிருந்த நிலையே சத்துவத்தின் றொழிலென்றும் உரையாமோவெனின்; உரையாம், என்னை? பிறந்த மகவின்மாட்டு உறங்குதலொன்று, அல்லது அழுது பாலுண்டல் ஒன்று என்னும் இருதிற நிலையேயன்றி, அவ்வாறு முத்திறநிலை காணப்படுதல் இல்லாமையான் என்க. பிறந்த பரும் பாலும் ஆணவவிருளிலே அயர்ந்து உறங்குகின்றது; பசியெடுத்த பொழுது மாத்திரமே அழுது பாலுண்கின்றது; பாலுண்டு பசி தணிந்த வளவானே மறித்தும் உறங்குகின்றது; இங்ஙனம் உறங்குதற்கும் அழுது பால் பருகுதற்கும் இடையே மகிழ்ந்து அமைதி பெற்றிருக்கு நிலை பிறந்த சில நாட்கள் காறும் அதன்பாற் காணப் படாமை அனுபவமுடையார்க் கெல்லாம் தெரிந்ததோர் உண்மையே யாம். மகிழ்ந்து அமைதியுற்றிருக்குஞ் சத்துவ நிலை அதன்பால் இல்லாதாகவே, அதனோடு இயை புடைய ஏனை இராசத

மகவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/98&oldid=1591427" இலிருந்து மீள்விக்கப்பட்டது