உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் 28

இவ்வாறு பிறந்த குழவியின் மாட்டுக் காணப்படும் அழல் பால்பருகல் முதலான முதன் முயற்சிகளைத் தோற்றுவித்தற் கருவியானது கலை என்னுந் தத்துவமே யாதல் பெறப்படவே மண்முதன் மூலப்பகுதி யீறான இருபத்துநான்கு தத்துவங் களுட்படாத அம்முயற்சிக்குக் காரணமாம் அது அவ்விருபத்து நான்கின் வேறேயாய் உண்டென்பதுந் தானே பெறப்படும். இனித் தன்கீழ் நின்ற இருபத்து மூன்று தத்துவங்கட்குத் தான் பிறப்பிடமாய் நிற்கும் மூலப்பகுதி பெரிதுஞ் சூக்கும மாவதொரு காரணப் பொருளே யாயினும், அது தன்னினுஞ் சூக்குமமான இக் கலாதத்துவத்தை நோக்கத் தூலமாய் நிற்றலின் அஃது அதனின் காரியமாமென்றல் சிறிதும் மறுக்கப்படாத உண்மையாம். ஆணவமலமென்னும் வல்லிருளின் வாய்ப் பட்டு அறிவிச்சை செயல்கள் முழுதும் இழந்து கிடந்த உயிர்கள், இக்கலை என்னும் நுண்பொருளுதவியால் அவ்விருளினின்றுஞ் சிறிது விலகவே தஞ்செயல் மின்மினி விளக்கம் போலச் சிறிது தோன்றப்பெறும். இங்ஙனம் அண்டபிண்டங்க ளிரண்டினும் மூலப் பிரகிருதி முதல் இருபத்து நான்கு தத்துவங்களும் பிறத்தற்குக் காரண மாயிருக்கும் இக்கலை என்னும் மிக நுணுகிய பொருள் உயிர்கள் எல்லாவற்றின் உடம்புகளினும் அமைந்திருத் தலாற்றான், அவ்வுயிர்கள் தாய்க்கருப்பை யினின்றும் அகன்று இந்நிலத்திற் பிறந்த மாத்திரையானே சுருசுருப்பு டையவாய் வாய்திறந்தழுதலும் பாலுண்டலுஞ் செய்து போதருகின்றன. இனி இம் முயற்சி அடுத்தடுத்து நிகழவே, இதன் வாயிலாகப் பின்னர்ச் சிறிது காலத்து ளெல்லாம், பிறந்த அவ்வுயிர் கண்மாட்டுச் சிறிதறிவு முகிழ்ப்புங் காணப்படுகின்றது.குழவிப்பருவத்தே முகங்காட்டும் அவ்வறிவு யாதோ வெனின், பசிப்பிணியாற்றாது வாய் திறந்து அழும் மகவு பாலூட்டுந் தன்றாய் தன்னருகே வந்து தன்னை யெடுத்தலும் அவ்வழுகை தீர்ந்து பால் பருகுதற்கண் முயற்சி யுடைத்தாதலை உற்றுணர வல்லார்க்கு, அம் முயற்சிக் கட்டோன்றும் அறிவின் பெற்றி இனைத்தென விளங்கா நிற்கும்.

னி, உயிர்கண்மாட்டு முதன் முயற்சியினைத் தோற்று விக்குங் கருவி கலையென்னுந் தத்துவமாமேல், அதனை யடுத்து அதன் பின்னதாய்த் தோன்றும் மிகச் சிறிய இவ் வறிவினை எழுப்புதற்கும் ஒரு கருவி வேண்டப்படுமாலோ வெனின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/97&oldid=1591426" இலிருந்து மீள்விக்கப்பட்டது