உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

71

ஒருவரிசைப்பட இயங்குதல் கண்டாமன்றி, ஏனைப் பத்தொன் பதும் நடைபெறக் கண்டிலமாலெனின், அற்றன்று, உயிரின் அறிவு நடைபெறுதற்குக் குணம் புத்தி அகங்காரம் மனம் என்னும் நான்கு அகக்காரணங்களும் இன்றியமையாதன வாகலின், அஃதொரு புறக்காரணத்தைப் பற்றுதற்பொருட்டு இவை நான்கும் படிப்படியே மிக்கு விரைந்து இயங்குவவாயின; இவை நான்கன் சேர்க்கையால் ஏனைப்புறக்காரணங்களுள் எஃது எக்காலத்தியங்கல் வேண்டுமோ அஃது அக்காலத்தி யங்கும்; எனவே, உயிரினறிவு நிகழ்ச்சிக்கு இன்றியமையாத னவாம் இந்நான் சுகக்கருவிகளுமே ஒன்றனையொன்றவாவி ருங்கு நிகழுமல்லாமல், இவற்றான் ஏவப்படும் ஏனைப் புறக்கருவிகள் பத்தொன்பதும் ஒருவரிசைப்பட நிகழுமென்பது ஈண்டுக் கூறியதன் கருத்தன்றெனக் கடைப்பிடிக்க. அங்ஙன மாயினும், ஒருவனிடத்துச் சத்துவகுணந் தோன்றுங் கால் ஏனை இராசத தாமதங்கள் உடன் றோன்றாமையானும், உடன் றோன்றுமெனின் அதனைச் சத்துவம் என்றுரைத்தல் அமையா மையானும் ஆண்டு இந்நியதி பெறப்பட்டிலதாலெனின், அற்றன்று, ஒருவன் ஒன்றை அறியுமுன்னுஞ் செய்யும் முன்னும் வாளாவிருத்தலின் ஆண்டுத் தாமதமும், பின்னர் அறிதற்குஞ் செய்தற்கும் மனவெழுச்சி கொளப்பெற்றக்கால் ஆண்டு இராசதமும், அதன் பின்னர் நற்குண நற்செய்கை தோன்றியக் கால் சத்துவமும் ஒன்றனையொன் றவாவி ஒருவரிசைப்பட நிகழக் காண்டலால் ஆண்டும் அந்நியதி பிறழ்ந்த தின்றென்க. என்றிக் கூறியவாற்றால், இராசதம் நிகழுங்கால் அதனோடு இயையுடைய ஏனை அகக்கருவிகளும் ஒன்றன்பின் ஒன்றாய் ஒரு வரிசைப்பட மிக்கு விரைந்து நடைபெறல் வேண்டுமென்ப தூஉம், பிறந்த மகவின்மாட்டக் காணப்படுஞ் சில முதன் முயற்சிகள் இராசத குணஇயக்கமென் றுரைப்பின் அதனைப் பற்றித் தொடர்புற்றுத் தோன்றற் பாலனவாம் பகுத்தறிவும் நான் என்னும் உணர்ச்சியுங் காணப்படுதல் வேண்டு மென்பதூஉம், அங்ஙனம் அவை அம்மகவினிடத்துத் தோன்றக் காணா மையான் அம் முதன் முயற்சி இராசதகுண தத்துவத்தின் காரியமாதலின்றி அதனினும் மற்றை மற்றை இருபத்துமூன்று தத்துவங்களினும் வேறான மிகநுண்ணிய கலாதத்துவத்தின் காரியமே ஆகற்பாலதென்பதூஉம் இனிது பெறப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/96&oldid=1591425" இலிருந்து மீள்விக்கப்பட்டது