உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் 28

ஆ யினும், கால வெல்லையின் சிறுமையை, மிகச் சிறிய இடத்தினும் அதனை விரைவிற் கடந்துபோம் பொருணிகழ்ச்சி யினும் வைத்து நுனித்தறிவார்க்கு நிகழ்காலமென ஒன்று இல்லை யாதல் தேற்றமேயாம். இது கிடக்க.

இனி ஈண்டுக் காட்டிய உவமைக்கண் பாண்டிலும் அதனை ஈர்க்கும் பகடும் அவ்வழியே செல்லாமல் வறிதே ஓரிடத்து இருந்தனவாயின், அவற்றின் இயக்கத்தான் அறியக் கிடந்த காலம் என்பதன் இருப்புச் சிறிதும் புலனாகாதன்றே? அற்றன்று, ஞாயிற்றின் இயக்கத்தால் பகற் பொழுதின் கால அளவும், ஏனைக் கோள்களின் இயக்கத்தால் இராப் பொழுதின் காலவளவும், இவ்விரண்டினியக்கந் தெரியப் படாத மழை காலத்தில் நாழிகைவட்டில் முதலான கருவிகளின் இயக்கத்தால் அவ்விருபொழுதுகளின் கால வளவுந் துணியப் படுமாம் பிறவெனின்; நன்று கடாயி னாய், இப்பொருள்கள் எல்லாவற்றின் இயக்கமுமே இல்லா தொழியின் இவை காண்டு துணியப்படுங் காலம் என்பதன் இருப்பு யாங்ஙனம் பெறப்படுமோ வென்பது, அற்றாயின், காணப்படும் உலகம் வாயிலானன்றே காணப் படாத கடவுளின் இருப்புத் துணியப் படுகின்றது? இனி உலக மின்றாயின் இறைவனிருப்புந் துணியப் படாது கொல்லோ வெனின்; அறியாது கூறினாய்; நேர்முகமாக இறைவனை அறிய மாட்டாதவர்க்கு அவ்வறிவினைப் பயத்தற்கு உலகம் வேண்டப்படுவதன்றி, அதனை ஒரு சிறிதும் அவாவாது நேர் முகமாக வைத்து அறியவல்லார்க்கு அதன் இருப்பு உண்மையான் உணரப் படுமாகலின் அது கடாவன்றென்க. அற்றேற், காலமும் ஒரு தனிப்பொருள் என்பது அதனை நேர் முகமாக வைத்துக் காண வல்லார்க்குத்

தோன்றுமெனின், பௌட்கர முதலான சிவாகமங்களிற் காலம் இறப்பு எதிர்வு நிகழ்வு என்று பகுக்கப் படுவதெனக் கூறியதன்றி, அதனை நேர்முகமாகக் கண்டாரைக் கூறிற்றின்மையானும், அஃதொரு தனிப் பொருளெனக் கிளந்து கூறி வலியுறுத் தாமையானும் அவ்வாறு கோடல் பொருந்தா தென்பது. அங்ஙனமாயின், அதனை அசுத்த மாயா தத்துவங்களில் ஒன்றாக வைத்து ஏழு எனத் தொகை கொடுத்தெண்ணிய தென்னை யெனின்; தனிப்பொருளல்லாத

கன்மத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/109&oldid=1591439" இலிருந்து மீள்விக்கப்பட்டது