உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

ள்

85

மும்மலங்களுள் ஒன்றாக வைத்தெண்ணியது போலவும், தத்துவங்களுள் ஒன்றல்லாத ‘புருட தத்துவத்’ தை அவற்றுள் ஒன்றாக றாக வைத்துரைத்தது போலவும் இதுவும் அங்ஙனம் வைத்தெண்ணப்படுவதாயிற் றென்க. அங்ஙனங் காலம் ஒரு தனிப்பொருளன்றாயின் அஃது இறப்பு எதிர்வு நிகழ்வு என மூன்றாக வகுக்கப்படுமென்றல் மலைவாம் பிறவெனின்; இடத்தின் முற்பிற்பாடு நோக்கிப், பொருணிகழ்ச்சியே அங்ஙனங் காலமென்னுஞ் சொல்லால் முக்கூற்றதாக வழங்கப் பட்டதன்றிப் பொருணிகழ்ச்சியின் வேறாய்க் காலமென்பது பிறிதில்லை யென்க. முன்னே எடுத்துக் காட்டிய உவமையில் ஒன்று இரண்டு முதலான இலக்க மிட்ட இடங்களைக் கடந்து போந்த பகடு பாண்டில் என்னும் பொருள்களின் நிகழ்ச்சி யையே இறந்தகாலமென்றும், அப்பொருள் இனிச் செல்லக் கடவனவாய இடங்களில் நிகழும் நிகழ்ச்சியையே எதிர்கால மென்றும் பகுத்தது காண்க. இங்ஙனமே, கதிரவன் முன்நாள் இயங்கிய நிகழ்ச்சியை நேற்று எனவும், இந்நாள் இயங்குகிற நிகழ்ச்சியை இன்று எனவும், பின்னாள் இயங்கும் நிகழ்ச்சியை நாளை எனவும் வழங்கிவருகின்றாம். இக் கதிரவன் நிகழ்ச்சியின் வேறாக ‘முன்னாள்' ‘பின்னாள்' எனப் பகுத்துரைக்கப்படுவது பிறிதுண்டோ கூறுமின்! இன்னும் பொருணிகழ்ச்சி யாதென நுணுகி ஆயும் வழிப், பல பொருள்கடம்முள் ஒன்றோடொன்று இயைதற்குரியன ஒருங்கு இயைந்து ஓரிடத்திற் கிடவாது இயங்கும் இயக்கமேயாமென எவரும் உணர்ந்து கொள்வர். ஞாயிற்றின் ஆற்றலால் வலிக்கப் பட்டு இந்நிலமண்டிலம் அதனைச் சூழ்ந்து போதலும், இந்நிலமண்டிலத்தால் ஈர்க்கப் பட்டுத் திங்கள் மண்டிலம் இந்நிலத்தைச் சூழ்ந்து சேறலும் பெரும்பொருணிகழ்ச்சி களாகும். இனி இந்நிலவுலகத் துயிர்கள் தத்தம் அறிவு நிலைக்கேற்ற பல்வேறு உடம்புகளில் இயைந்து இந் நிலத்தைப் பற்றிக்கொண்டு இயங்கும் இயக்கமும், உயிரில் பொருள்களுட் காந்தக்கல்லி னெதிரே இருப்பூசியும் மின்சாரத் ததிரே ஏனைப் பலபொருள்களும் இயங்கும் இயக்கமும் சிறு பொருணிகழ்ச்சி யெனப்படும். இவ்விரு திறப்பட்ட பொரு ணிகழ்ச்சிகளும் அவ்வப் பொருள்களிலுள்ள ஆற்றல்களின் தோற்ற மேயாகும். இரும்பைக் காணாமுன் தன்ஆற்றல் காட்டாது கிடந்த காந்தம் அதனைக் கண்ட மாத்திரையானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/110&oldid=1591440" இலிருந்து மீள்விக்கப்பட்டது