உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

  • மறைமலையம் - 28

அவ்வாற்றல் காட்டி அதனை ஈர்த்துக் கொள்ளுதல் கண்டா மன்றே. வாய் திறவாது உறங்கிக் கிடந்த மகவு பசியெடுத்த வளவானே வாய் திறந்தழுது பால்பருகும் முயற்சி யுடைத்தாதல் காண்டு மன்றே. பார்த்தபொருளைப் பார்த்தவாறே எழுதிக் காட்டுங் கைவல் ஓவியன் துகிலிகையும் வண்ணங்களும் பெற்றவுடன் சுவர்மேல் எழில் நலங் கனிந்த ஓவியங்கள் தீட்டுதல் காண்டுமன்றே. இங்ஙனமே ஏனைப் பொருள்களினும் அவ்வவற்றின் ஆற்றல் தோன்று மாற்றை உய்த்துணர்ந்து கொள்க.

அற்றேலஃதாக, "நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற், றாக்காது நின்றுளத்திற் கண்டு” எனச் சிவஞான போதத்தும், "ஞாலமேழினையுந் தந்து நிறுத்திப் பின் நாசம் பண்ணுங், காலமே போலக் கொண்ணீ யச்செயல் கடவுட் கண்ணே” எனச் சிவஞான சித்தியாரினும்காலம் ஒருதனி முதல் போல வைத்துக் கூறிய கோள்கள் வழுவாம்போலுமெனின்; அறியாது வினாயினாய், மேற் கூறியவாற்றாற் காலமாவது 'பொருணிகழ்ச்சிகளை வேறோராற்றால் வழங்குதற்கிட் குறியீடேயாமன்றிப் பிறிதன்றென்பது நன்கு பெறப்படலானும், எண்ணிறந்த உயிர்களையும் பொருள்களையு மெல்லாம் இறை வனது வரம்பிலாற்றல் வழிநின்று இயக்கும் மாயாசக்தியாய் பெரும் பொருணிகழ்ச்சியே ஆண்டுக் காலமென ஓதப்பட்ட தென்னும் நுண்பொருள் இன்னோ ரன்னவற்றை மலைவறுத்து ணர வல்லார்க்கெல்லாம் இனிது விளங்கு மாகலானும் அவை வழுவாமாறு யாண்டையதென மறுக்க. இத்துணையுங் கூறிய வாற்றாற் பொருணிகழ்ச்சியின் முற்கழிவே இறந்த கால மெனவும், முற்பிற்பாடு தோன் றாமல் அடுத்தடுத்து விரைவில் நிகழும் அதன் நிகழ்ச்சியே நிகழ்கால மெனவும், பின் நிகழற் பாலதாம் அதன் நிகழ்ச்சியே வருங்கால மெனவும் பகுத்து ணர்ந்து கொள்க. அவ்வவ்விடங்களான் வரையறுக்கப் பட்ட ஏகதேசப் பொருள்கள் மாத்திரமே முற்பிற்படும் நிகழ்ச்சிகள் உடையனவாதல் கண்கூடாகப் பெறக்கிடத்தலின், இவற்றின் நிகழ்ச்சிகளே அங்ஙனம் முக்கூற்றுக் காலவாய் பாடுகள் பற்றி ஓதப்படுவவாயின. இனி இவ்வேகதேசப் பொருள்கள் அனைத்தையும் தன் வியாகபகத்துள் அடக்கி, உயிரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/111&oldid=1591441" இலிருந்து மீள்விக்கப்பட்டது