உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

87

பொருள்கள் எல்லாவற்றிற்கும் முதலாய், இவைபோல் உயிரின் அகக்கருவி புறக்கருவிகளுக்குப் புலனாதலின்றி யாண்டும் வரம்பின்றி விரிந்து நிற்கும் மாயையாகிய பெரும்பொருளின் நிகழ்ச்சி, அங்ஙனம் இறப்பு எதிர்வு நிகழ்வென மூன்றாக குக்கப்படாது பொதுப்பட நிற்கும் இயல்பிற்றாகலின் அதுவே அவ்வாறு பொதுப்பட வைத்துக் காலமென வழங்கப் படுவதாயிற்றென்னும் உண்மை அஃகிய அறிவாற் கண்டு

கொள்க.

அற்றன்று; உயிர்க்கருவிகளுக்குப் புலனாகாத மாயா சக்தியே அங்ஙனம் பொதுமையிற் காலமென்று பெயர் பெற்ற தென்றுரைக்க வேண்டுவதென்னை? அதுபோற் புலனாகாது நின்று காலமே உலகத்தின்கட் படும் நிகழ்ச்சிகளை உண்டு பண்ணுமென்று உரையாமோ வெனின்; உரையாம், என்னை? காலம் எல்லாம் வல்ல முதல்வன்போல் அறிவுடைப் பொருளன்றாகலானும், அது மாயையிற் றோன்றுவதென்றே ஞானநூல்களெல்லாம் உரைப்பக்காண்டுமல்லால் அஃது அதனின் வேறாய்த் தனித்து நிற்பதென யாண்டும் ஓதப் படாமை யானும், செயலற்றுக் கிடந்த மாயை இறைவன் றிருவருட் சக்தியால் உந்தப்பட்டுச் செயலுடைத் தாய வழியே காலமுள தாயிற்றென் றுரைக்கும் ஞானநூற் கருத்தை உய்த்துணரும் வழி அம்மாயையின் இயக்கமே வழங்குதற் பொருட்டுக் 'காலம்' என வேறொரு பெயரால் மொழியப்படலாயிற் றென்னும் உண்மை இனிது விளங்க லானும், ‘காலம்’ ஒரு தனிப் பொருளே எனக் காள்ளினும் அதனியல்பும் மாயையின் நிகழ்ச்சியும் ஒரு சிறிதும் வேறுபடாமையின் அதனை அதனின் வேறென்றலாற் போதரும் பயன் ஒன்றின்மையானும் என்பது. அற்றேல், மாயையின் நிகழ்ச்சி ஒன்றுமே கூறவமையும், அதனின் வேறுபோல் வைத்து அதனை வேறொரு பெயராற் கூற வேண்டுவ தெற்றுக் கெனின்; வாளா கிடந்த மாயைக்கும் முதல்வன் அருட் சக்தியாற் செயலுடைத்தாகிய மாயைக்கும் வேறுபாடு புலனாதல் வேண்டி அங்ஙனங் கூறல்வேண்டிற் றென்க. அற்றன்று, மாயையின் செயல் அம்மாயையின் வேறாகா மையின் அவை அவை வேறுவேறுபோற் கொண்டு இருபெயராற் கூறுதல் பயனின்றி வறிதாமெனின்; நன்று

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/112&oldid=1591442" இலிருந்து மீள்விக்கப்பட்டது