உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் - 28

வினாயினாய், ஒருவன் உறக்க ஒருவன் உறக்க நோயாற் பற்றப்பட்டப் பல்லாண்டுகள் செயலின்றிக் கிடந்த நிலைக்கும், பின்னர் அந்நோய் தீர்ந்து செயலுடைய னாய்த் தனக்கும் பிறர்க்கும் பயன்பட்டு ஒழுகிய நிலைக்கும் உள்ள வேறுபாட்டினை நன்குணர வல்லார்க்கே மாயையின் இயக்கத்திற்குக் 'காலம்' என வேறு பெயரிட்டு வழங்கியதன் சிறப்பு விளங்கும், இவ்வுலகங்களுக் கெல்லாம் முதற் காரணப்பொருளாகிய அஃது ஏதும் செயலின்றிக் கிடந்தக்கால் ‘மாயை' எனப் பெயர் பெறலாயிற்று; அந்நிலை தீர்ந்து அது செயலுடைத் தாகியவழி அதன் செயல் ‘காலம்' எனப் பெயர் பெறலாயிற் றென்று பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வா றன்றிக் காலம் ஏனைய போல் ஒரு தனித்தத்துவம் அன்றென் பது கடை ப் பிடிக்க. தனித்தத்துவம் அன்றாயினும், அது மாயையாகிய பெரும் பொருணிகழ்ச்சிக்குப் பெயராய் அப்பொருளினியக்கச் சிறப்பை ஆராய்வார் அறிவின்கட் டோற்றுவித்தலின் அஃது ஏனைய தத்துவங்களுடன் ஒன்று போல் வைத்து எண்ணப் படுவதாயிற் றென்பது.

இனி 'நியதி' தத்துவ இயல்பினைச் சிறிது ஆராய்ந் துரைப்போம், இந் நியதி என்னுஞ் சொற் பிறழாமை எனப் பொருள்படும் ஒரு வடமொழியாம். முன் எடுத்துக் காட்டிய 'காலம்' என்னுஞ்சொல் மாயையாகிய பெரும் பொருணி கழ்ச்சிக்குப் பெயராயமைந்தாற்போல, இந் நியதி என்னுஞ் சொல் அப்பெரும்பொருணிகழ்ச்சி பிறழா வியல்பிற்றாத லைத் தெரித்துக் கூறுவதாம். மாயையும் மாயையிற் றோன்றிய எல்லாப் பொருள்களும் பிறழா நிகழ்சசி யுடையனவாதல் அவற்றுள் ஒரு சிலவற்றை ஆராய்ந்து பார்ப்பினும் நன்கு விளங்கும். பொன் என்றும் மஞ்சள் நிறத்ததாகவே திகழும் நீர்மையது; கல் என்றும் வற்கென்ற இயல்பினதாகவே கிடப்பது; நீர் என்றும் நெகிழ்ந்த பதத்தி னையே யுடையது; தீ என்றுஞ் சுடுதலும் ஒளிதருதலுமே வாய்ந்தது; காற்று என்றும் உளருந் தன்மையே பொருந் தியது; வெளி என்றும் புலனாகாத விரிவுடைத்தாய் எல்லாப்பொருளுக்குந் தான் L னாய் இருப்பது. இன்னும், நமது நிலவுலகம் தன்னிலை வழுவாது என்றும் ஒரு பெற்றித்தாகவே ஞாயிற்று மண்டிலத்தைச் சூழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/113&oldid=1591443" இலிருந்து மீள்விக்கப்பட்டது