உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

89

ம்

போதலும், அதனால் இராப்பகற் போதுகள் ஒருபடியாக மாறிமாறி வருதலும், இந்நிலமண்டிலத்தைச் சூழ்ந்து மதி மண்டிலஞ் செல்லுங்கால் நிலத்தின் நிழல் தன்மேற் படுதலிற் பதினைந்துநாள் வளர்ந்து நிரம்புவது போன்றும் ஏனைப் பதினைந்துநாள் தேய்ந்து குறைவது போன்றும் அம் முறை பிறழாது காணப்படுதலும், வேனிற் காலத்து வெயிலும் மழை காலத்து மழையும் கூதிர்காலத்துக் குளிரும் மாறாமற் றோன்றுதலும், வித்திலிருந்து முளையும் முளையிலிருந்து பூண்டும் தோன்றி முறை முறையே வளர்தலும், காந்தக் கல்லை யெடுத்து ஊசியின் நேரே ஒக்கப் பிடித்தவழி அஃது அவ்வூசி யினைத் தன் மாட்டு ஈர்த்துக் கொள்ளுதலும், குழவிப்பருவத் துள்ளன இளமைப்பருவத்தையும் இளமைப் பருவத்துள்ளன முதுமைப்பருவத்தையும் எய்தி இறுதியில் எல்லாம் அழிவெய்து தலும், இன்னும் இவைபோல்வன பிறவும் எல்லாம் அவ்வப் பொருள்களிற் காணப்படும் பிறழா நிகழ்ச்சிகளாகலின் இவை யெல்லாம் நியதியெனவே வழங்கப்படும். பொருள்கள் இங்ஙனம் பிறழா நிகழ்ச்சி யுடைய வாதற்குக் காரணம் என்னையெனின்; இயற்கைப் பொருள்கள் எல்லாம் அறிவில்லா தனவாகலின் அவற்றின் உண்மைக் குணங்கள் வெளிப்படுங் கால் அவை ஒருபடி யாகவே தோன்றுமல்லால் வேறொரு படியாகத் தோன்ற மாட்டாவாம். காந்தக்கல் இரும்பை ஈர்க்குங் குணம் உடையது, இஃது அறிவில்லா இயற்கைப் பொரு ளாதலின் ஈது இரும்பைத் தலைப்பட்டு இக் குணத்தை வெளிப் படுக்குங்கால் என்றும் அதனை ஈர்த்தலாகிய ஒரு தொழிலை யே பிறழாமற்செய்யும். இவ்வாறே இயற்கைப் பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வவற்றிற்குரிய குணங்கள் வழியே இயக்கினால் அவை பிறபொருள்களாற் றடைநேரா வரையும் தாம் இயங்குமாறே என்றும் இயங்குவனவாம். ஒரு பந்தை எடுத்து உருட்டியக்கால் அஃது உருண்டுகொண்டே செல்லாநிற்கின்றது; நிலத்தின் சருச்சரை வடிவத்தில் உராய்தலானும் எங்கும் நிறைந்த காற்றினாற் றடுக்கப்படுத லானும் எங்கும் நிறைந்த காற்றினாற் றடுக்கப்டுதலானும் அது சிறிது நீளச்சென்று நின்று விடுகின்றது; இத்தடை களில்லாவழி அது சிறிதும் நில்லாமல் உருண்டு கொண்டே செல்லு மென்பது திண்ணமன்றோ? காந்தக்கல் இடையிற்றடை

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/114&oldid=1591444" இலிருந்து மீள்விக்கப்பட்டது