உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் - 28

நேர்ந்திலதாயின் என்றும் இரும்பைத் தன் மாட்டு ஈர்த்துக் கொண்டு அதனைப் பற்றியபடியே கிடக்கும் நிகழ்ச்சியின்கண் இவ்வுண்மையை வைத்துக் கண்டு கொள்க. எனவே, அறிவில்லா இயற்கைப் பொருளாகிய மாயையினும் மாயையிற் றோன்றிய பொருள்களினுமே ‘நியதி' யாகிய பிறழா நிகழ்ச்சி உளதா வதன்றி, ஏனை அறிவுடைய உயிர்ப்பொருள் களிடத்து அந்நியதி காணப்படுதல் இல்லையாம், என்னை? உயிர்கள் தமக்குள்ள அறிவின் வன்மையால் மாறி மாறி நடக்கும் பெற்றிய வாதலானும், இயற்கைப் பொருள்கள் தமக்கு அஃதின்மையால் அவ்வாறு மாறி இயங்கமாட்டா வாகலானும் என்பது. ஒரு கல்லை வீசி யெறிந்தால் அது வீசிய பக்கம் நேரே செல்வ தன்றிப் பிறிதெதுவுஞ் செய்ய மாட்டா தாகும்; அறிவுடைய ா பறவையோ அங்ஙனம் ஒரு முகமாகவே செல்லாது தன் அறிவின் வன்மையால் தனக்கேற்றபெற்றி மாறி மாறிப் போவதுங் கண்டு கொள்க. இதுபற்றியே இந் ‘நியதி’ மாயா தத்துவங்களுள் ஒன்றாக வைத்து ஓதப்படுவதாயிற்று:

அற்றே லஃதாக, இந் 'நியதி'யை ஒரு தனித்தத்துவ மாகக் கொண்டு கூறுதுமோ, அன்றி மாயையின் பிறழா நிகழ்ச்சியே அதுவெனக் கூறுதுமோ வெனக் கடாயி னார்க்கு, அதனை ஒரு தனிமுதலென விடுப்பிற் காந்தம் இருப்பூசியை ஈர்த்துக் கோட லாகிய பிறழா நிகழ்ச்சியையும் ஒரு தனிமுதலெனக் கூற வேண்டுதலின் அங்ஙனமுரைத்தல் சிறிதும் ஏலாமையானும், அன்றி அதனை ஒரு தனி முதலே என நிறுவுதற்கு வேறு வாயிலின்மையானும் அங்ஙனங் கிளத்தல் காண்டல் அளவை மாறு பாடா மெனவும் மற்று அது மாயையின் ‘பிறழா நிகழ்ச்சிக்கே பெயராமெனவும் உணர்ந்துகொள். அற்றாயின், அதனை ஒரு தனித்தத்துவம் போல் வைத்துச் சித்தாந்த நூல்கள் ஓதுமா றென்னை யெனின்; அறியாது விளாயினாய், ஏதும் இயக்க மின்றிக் கிடந்த 'மாயை' இறைவன் றிருவருட் சத்தியான் உந்தப் பட்டு ஒரு புடைபெயர்ச்சி யுடைத்தாய வழி அதனையே ‘காலம்' எனவும், அப்புடைப்பெயர்ச்சி பிறழாது நிகழு மாற்றையே ‘நியதி' எனவும் அந்நூல்கள் கூறினமை மந்த வுணர்வினார்க்குத் தனித்தத்துவங்கள் கூறினாற்போற் றோன்றுமாயினும், நுண்ணுணர்வுடையார்க்கு அஃது அம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/115&oldid=1591445" இலிருந்து மீள்விக்கப்பட்டது