உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

91

மாயையிற்படும், பன்னிகழ்ச்சிகளைப் பாகுபடுத்துரைத்த தெனவே இனிது விளங்கும். உய்த்துணர்வு வேண்டா ஏனைக் கோட்பாடுகள் போலாது, சைவசித்தாந்தம் அவ்வுணர்ச்சி மிகவுடைய நுண்ணிய பொருள் முடிபாக லின், அதன்கண் வெறுஞ் சொற்பற்றி மயங்காது, கருத்தறிந் துரைத்துக் கோடலே இன்றியமையாது செயற்பாலதாம். அதுகிடக்க.

இனி 'நியதி' என்பது ‘அவரவர் செய்த கன்மம் அவரவரே நுகருமாறு நியமிக்குந்’ தத்துவமாகலின் அதனை மாயையினும் மாயையிற்றோன்றும் பொருள்களினுங் காணப்படும் பிறழா நிகழ்ச்சிக்குப் பெயரென வேறாய் உரைப்பது யாங்ஙனம் பொருந்துமெனின்; அறியாது வினாயினாய், நுணுகி நோக்கு வார்க்கு அவ்வாறுரைத்ததன் கண்ணும் பிறழா நிகழ்ச்சியே காணக்கிடத்தலின் அது பொருந்தாமை யாண்டையதென்க. ஒருவர் ஒருவினையை அடுத்தடுத்துப் பழகினால் அவர் அப்பழக்கத்தின் வயமாய்ப் பின்னர் அதனை விடமாட்டா மையின் அதனான் வரும் பயன்களை நுகர்ந்தே தீர்வர். நல்லாரி னத்திற் சேர்ந்து விழுமிய பொருள்களை ஆராய்ந்துணரும் பழக்கம் ஏறப்பெற்றவர், பின்னர் அப்பழக்கத்தின் நீங்கா ராகலின் அவரதனாற் பேரின்பமாகிய பயனை நுகர்ந்தே தீர்வர். நல்லாரி 6 னத்திற் சேர்ந்து விழுமிய பொருள்களை ஆராய்ந்துணரும் பழக்கம் ஏறப்பெற்றவர், பின்னர் அப் பழக்கத்தினை நீங்காராகலின் அவரதனாற் பேரின்பமாகிய பயனை நுகர்ந்தே தீர்வர். இவ்வாறன்றித் தீயாரினத்திற் சேர்ந்து கட்குடித்தல் சூதாடுதல் ஊனுண்டல் முதலான கொடுந் தொழிலிற் பழகினவர் பின்னரதனை விடாது பற்றுவ ராதலின் அவரதனால் வரும் பயனாகிய கொடுந் துன்பங் களுட்பட்டே யுழலுவர். இங்ஙனம் எவர் எவ் வினையிற் பயிலு கின்றாரோ அவரதனாற் றுடக்குண்டு அதன் பயனை நுகர்தல் பிறழா நிகழ்ச்சியாய் போதரல் எல்லார்க்குந் தெளியக் கிடந்தமையின், இதனையும் 'நியதி' தத்துவம் என்றல் வாய்ப்புடைத்தேயாம் என்க.

அற்றேல், முன்னெல்லாம் நியதியென்பது மாயையின் பிறழா நிகழ்ச்சிக்குப் பெயரென்பது சொல்லி வைத்து, ஈண்டு அதனை உயிரின் பிறழா நிகழ்ச்சிக்கும் பெயரா மென வுரைத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/116&oldid=1591446" இலிருந்து மீள்விக்கப்பட்டது