உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் -28

முன்னொடுபின் மலையுமாலோவெனின்; நன்று கூறினாய், மலத்திற்கட்டுண்டு நிற்கும் இந்நிலையில் உயிரின் வினை நிகழ்ச்சி அத்துணையும் மாயையின் பொருள் களைப் பற்றிக் காண்டே நடைபெறுதல் கண்கூடாய் அறியக் கிடத்தலானும், அப் பொருள்கள் உயிர்கண்மாட்டு வேட்கை யினைப் பிறப் பித்துத் தம்மை அவையிடையறாது பற்றும்படி ஏவி வினையின் கட் பிறழாது சுழற்றுதலானும் நுனித்தறிய வல்லார்க்கு உயிரின் கட்டோன்றும் அப்பிறழா நிகழ்ச்சி முற்றும் உண்மையில் அவற்றைத் தோற்றுவிக்கும் மாயையின் பொருள்களுக்கே உரியவென்பது தெற்றென விளங்கா நிற்கும். கள் சூது ஊன் முதலியவற்றை ஒருவன் இடையறாது அவாவும் வினை நிகழ்ச்சி அக்கள் முதலான பொருள்களையின்றி நடவா மையானும், அதனான் அவ்விடையறா வேட்கைக் காரணம் அப்பொருள்களேயாதல் நன்கு பெறப்படுதலானும், அப் பொருள்களைப் பற்றுதலால் அறிவு மயங்கி மதர்த்தலும் அம் மதர்ப்பினால் மேலும் பல தீவினைகளை யிழைத்துத் துன்புறு தலும் ஆகிய பயன்களை யெல்லாம் அவற்றைச் செய்த உயிர் களே நுகருமாறு அந் நுகர்ச்சிக் கெல்லாம் முற்படு காரண மாய் அமைந்து கிடந்தன. அப் பொருள்களே யாகலானும் அப்பொருள்களே அப்பிறழா நிகழ்ச்சிக்கு உண்மையான் உரியவாதல் தேற்றமேயா மென்பது, ஆதலின் ஈண்டுக் கூறியது முன்னொடுபின் மலை யுதல் சிறிதுமில்லை யென மறுக்க.

அற்றாயின், பிறழா வினை நிகழ்ச்சி மாயையினும் மாயை யின் பொருள்களினுமே யுள்ளதென்று கூறுதல் என்னை? அவற்றின் சேர்க்கையால் அஃதுயிரின்மாட்டுந் தோன்றுதல் காண்டுமாலெனின்; அற்றன்று, மாயையின் வினை நிகழ்ச்சி பிறழா இயல்பிற்றாதல்போல, உயிரின் வினை நிகழ்ச்சி எஞ்ஞான்றும் பிறழா வியல்பிற்றாதல் இல்லை; என்னை? அது மாயையைச் சார்ந்து அதன் வண்ணமாய் நின்றாற்போல, அதனைவிட்டுமாறி அருளைச் சார்ந்து அவ்வண்ணமாய் நிற்கவும் வல்லுமாகலினென்க மாயையைச் சார்ந்து நிற்குங் காறும் மாயையின் நிகழ்ச்சியும், இறைவன் அருளைச் சார்ந்து நிற்குங் கால் அவ்வருளின் நிகழ்ச்சியும் உயிரின் கட் டோன்று வனவாம்; அஃதேல் அங்ஙனமாக, பிறழா நிகழ்ச்சியென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/117&oldid=1591447" இலிருந்து மீள்விக்கப்பட்டது