உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

93

அறிவில்லா இயற்கைப்பொருட் குணமென்றும், அறிவு டைய உயிர்கட்கு அஃதுரிமைக் குணமாதல் செல்லா தென்றும் முடிக்கப் படுமாயின் பேரறிவுப்பொருளான கடவுள் பிறழா நிகழ்ச்சி யுடைத்தன்று என்பது கொள்ளப் பட்டு அஃதவன் இறைமைக் வழுவாமாலெனின்; அது பாருந்தாது.

குணத்திற்கு

இறைவனாவான் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்னும் எல்லாவற்றையும் தன்கண் அடக்கித், தான் எல்லாவற்றையுங் கடந்து எல்லையன்றி விரிந்து அசைவற்று நிற்கும் பெரு வியாபகத்தனாகலின், அவன் எவ்வகை நிகழ்ச்சியும் உடை உடையானல்லன; அன்னனாயினும், ஞாயிற்றின் திரே வித்தினின்று முளை தோன்றுதலும் பெருக்கக் கண்ணாடியில் தீப்பொறி பறத்தலும் நீர் ஆ வியாக மாறுதலும் போலத் தன்னெதிரே உலகமும் உயிர்களும் ஐந்தொழிலிற்பட்டு இயங்கத், தான் எவ்வகை நிகழ்ச்சியும் இலனாய் இவற்றின் கட் டாக்கற்று நிற்கும். அங்ஙனமாயின் ஏதொரு தொழினிகழ்ச்சியு மில்லா வெறுங் கற்போல் றைவனுங் கொள்ளப்படுமாம் பிறிவெனின்; அற்றன்று, ஒளிவிளங்கும் பளிங்குக்கற்கும் வறுங் கற்கும் வேற்றுமை யறிதியன்றே? மாற்றுயர்ந்த பொன்னுக்கும் இரும்புக்கும், வேற்றுமையறிதி யன்றே? விலைவரம் பில்லா முழுமணிக்கும் ஏனைய பரற்கற்கும் வேற்றுமையறிதியன்றே? உயிரும் அறிவும் இல்லாப் புன்பொருள்கடம்முள்ளும் இத்துணை வேற்றுமை உளதாயின், சிற்றறிவுடைய உயிர்கட்கும் பேரறிவுப் பிழம்பான முதல்வனுக்கும் எத்துணை வேற்றுமை உளதாம்! ஒருவரம்புட்பட்ட பொருள்கள் ஓரிடம் விட்டுப் பிறி தோரிடஞ் செல்லுதற்கு இடைவெளி யுண்டாகலினாலும், வரம்புடைப் பொருள்களைச் சாரும் உயிரும் அவைபோல் ஒரு வரம்பிற் UL லால் வையும் புடை பெயர்ச்சி உடை யவாதற்கு இடமுண்டாகலினாலும் வையனைத்தும் ஒரு தொழில் நிகழ்ச்சிக்குரியவாதலும் அந்நிகழ்ச்சி பிறழாமை நடைபெறு தலும் சாலப் பொருத்தமாம். முதல்வனோ வரம்புடைப் பொருள்களெல்லாவற்றையுந் தன்பா லடக்கித் தான் வரம் பின்றி நிற்குமாதலின், அவன் புடை பெயர்ச்சி சிறிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/118&oldid=1591448" இலிருந்து மீள்விக்கப்பட்டது