உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • மறைமலையம் - 28

உடையானல்லன்; புடை பெயர்ச்சியிலனாகவே அதுபற்றி வரும் பிறழா நிகழ்ச்சியும் உடையனல்லனாம், அப் பெற்றி யினா யினும் முற்றறிவு விளக்கமுடையனாய் என்றும் ஒரு பெற்றி யாயே நிற்பனாகலின், பிறழா நிகழ்ச்சியிலன் என்றதே கொண்டு அவனை வறுங்கற் போல் நினைத்தல் பெரியதோர் அறியாமை யாமென்பது. அற்றேற், புடை பெயர்ச்சியின்றிப் பேரறிவு மாத்திரையாய் விளங்கும் முதல்வன் எதிரே பொருளும் ஐந்தொழிற்படுமுறைமை யாங்ஙனமெனின்; நினைவு மாத்திரையாற் செய்வதூஉம் நினைவோடு கருவி வாயிலாற் செய்வதூஉமெனச் செயறான் இருவகைத்தாம்.

அவன்

எல்லாப்

ஒருவன் ஓர் ஓவியம் வனைந்தான் என்றவிடத்து அவ் வனைதற் றொழிலுக்குப் பல வண்ணங்களும் துகிலிகையும் படாமுங் கருவிகளா வேண்டப்பட்டன; இக்கருவிகளின்றி அதனை நிகழ்த்த மாட்டுவானல்லன். மற்று இறைவனோ, அவ்வோவியக்காரன் போற் கருவியினை அவாவாது படைக்க மாட்டானெனின், அஃதவன் வரம்பிலாற் றலுக்கு இழுக்காய் முடியுமாதலின், அவன் கருவிகடுணையின்றி நினைவு மாத்திரையால் எவற்றையும் படைக்கமாட்டுவா னென்பதே முடிந்த பொருளாம். அவ்வாறாயின் நினைவு ஒரு கருவியை வேண்டாமலே ஒன்றனைச் செய்தல் கண்டில மாலெனின்; ஒருவர் நினைத்த நினைவுகள் பிறரொருவர் உள்ளத்திற் றோன்றுமாறு ஆன்றோர் பலர்க்கு மெய்யனு பவமா யிருந்த லானும் இஞ்ஞான்றை மனநூல்வல்லார் ஆராய்ந்துரைக்கும் உரைகள் நினைவு பிறிதொன்றனைக் கருவியாக நாடாமலே யாவுஞ் செய்ய வல்லுமென இனிது நிறுவுதலானும், நினைவின் செயற்குக் கருவி ஏதும் வேண்டப் படா தென்னு முண்மை சிறிதும் ஐயுறற் பாலதன்றாம். அங்ஙன மாயின், நினைவும் ஒரு தொழிலைச் செய்யு மென்றுரைப்பவே, அதற்கும் புடை பெயர்ச்சி உளதா மெனப்பட்டு, அப்புடை பெயர்ச்சி பற்றி ஏகதேசத் தன்மையும் அவ்வேகதேசத் தன்மைபற்றி வேறுபாடும் வந்தெய்து மாலெனின்; நன்று கடாயினாய், நினைவினியற் கையும் ஏனைச்சடப் பொருளி னியற்கையும் பகுத்துணர மாட்டார்க்கு இங்ஙனந் தோன்று மாயினும், சடப்பொருள் போற் காலத்தானும் இடத்தானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/119&oldid=1591449" இலிருந்து மீள்விக்கப்பட்டது