உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

95

வரையறுக்கப்படாத நினைவு தூய அறிவு மயமாய் யாண்டும் வியாபித்து நிற்பதாகலின் அதன்றொழிற்குப் புடை பெயர்ச்சியும் அதுபற்றி வரக்கடவதாய வேறுபாடுங் கற்பித்தல் அதனியற்கையைத் தெளிய வுணர வல்லார் பால் இல்லை யாமென்க. ஆகவே, பேரறிவுப்பிழம்பான இறைவன் முன்னி லையில் எல்லாப் பொருளும் இயங்குதலும், அவ் வியக்கம் பற்றி அவன் ஒரு சிறிதும் வேறுபடாமையும் இந்நுட்பம் அறிய வல்லார்க் கெல்லாம் நன்கு விளங்கிக் கிடக்கும். ஆயினும், கரணத் தானன்றிச் செய்யமாட்டாத சிற்றறி வுயிர்களின் செயல் களையும், மற்றைச் சடப் பொருள்களின் தொழிற்பாடு களையுமே கண்டறியும் ஏக தேச அனுபவமுடைய நம்ம னோர்க்கு, வியாபக இயல்பினை யுடைய முதல்வனியல்பு களும் அவன் கரணத்தானன்றி நினைவு மாத்திரையால் அண்ட பேரண்டங்களை யெல்லாந் தோற்று வித்துச் சுழற்றும் பேரற்புத முறைகளும் முற்றும் உணர வாராவென்க; இது பற்றியன்றே “எந்தைதானின்ன னென்று மின்னதா மின்ன தாகி, வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்றமின்றே” என்னுந் திருவாக்கு மெழுந்தது! இங்ஙன மாகலின், பிறழா நிகழ்ச்சி யின்மை பற்றி இறைவன் பால் வரக்கடவதாம் இழுக்கொன்று மில்லை யெனவும், மற்று அஃது அவற்கு அளக்கலாகாச் சிறப்பேயாமெனவும் கடைப் பிடிக்க.

L

இனி இதுகாறும் எடுத்து விளக்கப்பட்ட முப்பது தத்துவங்களுக்கும் முதலான ‘மாயை’யினியல்பைச் சிறிது ஆராய்வோம். மேலெடுத்துரைத்த முப்பது தத்துவங்களும் பலவாய்ச் சடமுமாயிருத்தலானும், ஏறுமுறையில் ஒன்றி னொன்று சூக்குமமாயும் இறங்கு முறையில் ஒன்றினொன்று தூலமாயும் இருத்தலானும் இவற்றுள் ஏதேனும் ஒன்று தானே ஏனையவற்றிற்கு முதற்காரணப் பொருளாய் அமைதல் செல்லாது. எவை எவை ஒரு வரம்பிற்பட்ட பரி மாணமு டையன அவையெல்லாம் பலவாய் உருவுடைப் பொருளா யிருக்கும்; இனி னி எவை எவை பலவாயும் உருவுடைப் பொருளாயுமிருக்கும் அவையெல்லாம் சில காலத்தில் அழிவெய்தித் தத்தம் முதற்காரணத்தின்கண் ஒடுங்கும் என்னும் பிறழாநிகழ்ச்சியாற் றனித்தனி

யுருவுடைய ய வான இத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/120&oldid=1591450" இலிருந்து மீள்விக்கப்பட்டது