உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

97

புலனாகாத அணுக்களி னுருவாய் நிற்குமென்று கோடலே உத்திக்கியைவதாமெனின்; அது பொருந்தாது; அணுக்கள் ஒன்றல்லவாய்ப் பலவாயிருத்த லானும், பலவா யிருக்கும் அவை சிறிய சிறிய உருவங்கள் உடையவா யிருக்குமென்பதூஉம் அது கொண்டு முடிக்கப் படுமாகலின் வரம்புபட்ட பரிமாணங்க ளுடைய அவை காரியப் பொருள்களே யாவதல்லது காரணப் பொருள்களா வான் செல்லாமையானும், காரியப் பொருள் களான அவை பின்னும் பல சூக்கும வுருவங்களாய்ப் பிரிந்து அழிவெய்து மென்பதற்கு இஞ்ஞான்றைப் பௌதிகநூல் வல்லார் பரமாணுக்களை மின்னுருக்களாய்ப்* பிளவுபடுத்துப் பிரித்தலே சான்றா மாகலானும் அணுக்கள் ஐம்பூதங் களுக்கும் ஐம்பூதங்களுக்கும் ஐம்பூதமயக்கமான உலகங் களுக்கும் முதற் காரணமாகு மென்றல் சிறிதும் ஏலாது. ஏலாதாகவே அவ்வாறு ரைக்கும் வைசேடிக நூலாருரை கொள்ளற்பாலதன் றென்பதும் தானே விளங்கும்.

அங்ஙனம் பரமாணுக்கள் காரணம்பொருள்களாதல் பொருந்தாதென்று கோடுமாயினும், நான்கு பூதங்களும் ஆகாயம்போல் அருவாய்க் கரைந்து நிற்கும் சூக்கும நிலையே அவற்றின் காரணமாமென்றல் வாய்ப்புடைத்தா மெனின்; அதுவும் பொருந்தாது; ஆகாயம் ஒளியும் ஓசையும் உலவுதற்கு இடந்தந்து நிற்கும் அணுவுருவே யாமென்று இஞ்ஞான்றைப் பௌதிக நூலார் ஆராய்ந்து முடிவுகட்டி யிருத்தலானும்; அணுவுருக்கள் அழிவெய்து மென்பது மேலே காட்டி நிறுவப்பட்டமையானும்; ஆகாயம் சூக்குமவடிவிற்றாய் நிற்குமுண்மை அவ்வாகாயத்தின் குணமான ஓசை பலவேறு வடிவிற்றாய் நிகழும் முறைபற்றி *வேறோராற்றானும் துணியப் படுதலானும்; ஆகாயம் முதலிய ஐம்பெரும் பூதங்களுங் கரைந்து மறைந்தக்கால் அவை சத்த பரிச ரூபரசகந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரை வடிவாய் நிற்றலும், அது பின்னுங் கரைந்து தம்மினுஞ் சூக்குமமான பூதாரியாங்காரமாய் நிற்றலும், அது மேலுங் கெட்டுப் புத்திதத்துவமாதலும், அஃதழிவெய்திக் குண தத்துவ மாதலும் அடைவே விளக்கிப் போந்தமாதலானும்; ஆகாயம்போல் அருவாய் நிற்குஞ் சூக்குமநிலையும் அதனினுஞ் சூக்குமமாய் மேற்பட்டு நிற்கும் நிலைகளும் இடைப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/122&oldid=1591452" இலிருந்து மீள்விக்கப்பட்டது