உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் - 28

காரணங்களேயா மல்லது பரம சூக்கும மாய்ப் பகுக்கப் படாது ஒன்றாய் நிற்கும் அடிப்பட்ட காரணம் அல்லவாத லானும் ஆகாயம்போல் நிற்கும் அருவ நிலை பூதபௌதிகங் களுக்கு அடிக்காரணமாதல் ஒருவாற் றானும் இல்லையென்க. அற்றா யினும், ஐம்பூதங்களுந் தமது காரியநிலை கெட்டு அழிந்தக்கால் அவை ஒருவாற்றானும் பகுக்கக்கூடாத அருவச் சூக்குமநிலை மெய்தியிருக்கு மென்றே கோடும்; அதனை விடுத்து அவை பூதாதியாங் காரத்தில் ஒடுங்குமெனவும், அப் பூதாதியாங்காரம் தன்னினுஞ் சூக்குமமான புத்தி தத்துவத்தில் ஒடுங்குமெனவும் அது குணதத்துவத்தில் ஒடுங்குமெனவும் இங்ஙனமெல்லாம் வறிதே கூறிக் கொண்டு சென்று இறுதியாக மாயையி லொடுங்கு மென்றல் வேண்டா கூறலாமெனின்; அங்ஙன மன்று, ஒரு பருப் பொருள் அழிந்து மாறுங்கால் அஃது இடையிற் பலதிற நிலைகள் யெய்தி ஒன்றினொன்று சூக்குமமாய் இறுதியிற் பரம சூக்குமமாய்ப் போதலே அனுபவத்தின் வைத்து அறியக் கிடத்தலின், அதற்கியை யவே ஐம்பூதங்களுந் தமது காரியநிலை கெட்டு மாறுங்கால் இடையிற் பல சூக்குமதத்துவங்களாய்த் திரிபெய்தி இறுதி யிற் பரமசூக்குமமான மாயையாய் நிற்கு மெனக் கூறப் பட்டது. முதலிற் பளிக்குப் பாறை போற் சிடந்த பனிப் பிண்டமானது வெயிலால் நெகிழ்ந்துருகி நீராதலும், பின்னர் அந்நீர் ஆவியாக மாறுதலும், அவ்வாவி நீர்வளி* உயிர் வளிகளாகப் பிரிவுபட்டு மிகவும் நுணுகிப் போதலு மாகிய நிகழ்ச்சியில் இதனை வைத்துக் கண்டு கொள்க. அற்றேலஃதாக, ஐம்பெரும் பூதங்களும் பரமசூக்கும நிலையை எய்துமுன் நுண்ணிய பல தத்துவங்களாகத் திரிபுறும் எனக்கோடல் பொருந்துமாயினும், வாயுதத்துவத் திற்குமேல் மக்களறிவுக் கெட்டாத ஐந்து தன்மாத்திரை களாகவும் பூதாதியாங்காரம் முதலியனவாகவும் அவை மாறி நிற்குமாற்றை அம்மக்கள் யாங்ஙனங் கண்டாரோ வெனின்; மக்களுடம்பின் அமைப்பிலும், அவ்வமைப்பின் வாயிலாக அவரறிவு நிகழும் முறையிலும் வைத்து அவ் விடைப்பட்ட தத்துவங்களினியல் பெல்லாம் இனிதுணரக் கிடக்கு மென்பதை மேலே தெளிய வெடுத்து விளக்கினா மாகலின் ஆ ண்டுக் கண்டுகொள்க. அதுவேயுமன்றித் தெளிவுக் காட்சியுடையார் சிலர் இடை நிற்கும் அத்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/123&oldid=1591453" இலிருந்து மீள்விக்கப்பட்டது