உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

99

துவங்களின் இருப்பை நேரே கண்டு நன்குணர் வராகலானும், அப் பெற்றிப் பட்டார் இயற்றிய உபநிடதங் களும் ஆகமங்களும் சாங்கியம் வேதாந்தம் முதலிய நூல்களும் அத்தத்துவங் களைக் கிளந்தெடுத்துக் கூறுதலானும் அவற்றின் உண்மை துணியப்படுமென்க. எனவே, ஐம்பெரும் பூதங்களும் தமது காரியநிலைகெட்டு மாறுங்கால் இடையிற் பலதத்துவங் களாகத் திரிபெய்தி இறுதியில் அதிசூக்கும அருவப் பொருளான மாயையாய் நிற்குமென்றலே தேற்றமாம்.

அங்ஙனமாயினும், பூதபௌதிக உலகங்களுக்கும் அவற்றின் மேனிற்குந் தத்துவங்களுக்கு மெல்லாம் அடிப்பட்ட காரணமாய் நிற்பது பிரகிருதி மாயையேயாமென்று சாங்கிய நூலார் ஓதுபவாகலின், அதற்கு மாறாகப் பிரகிருதி தனக்கு மேலுள்ள கலாதத்துவத்தில் ஒடுங்கு மெனவும், அக்கலை அசுத்த மாயையிலொடுங்கு மெனவும் மேலும் இருசூக்கும தத்துவங்களைக் கற்பித்தல் பொய்க் கற்பனையாமன்றி மெய்யாதல் செல்லா தெனின்; அறியாது கூறினாய், பிரகிருதி யாவது சத்துவம் முதலான முக்குணங்களும் ஏறாதுங் குறை யாதுந் தம்முளொத்து நின்ற நிலையேயென அச்சாங்கிய நூலார் உரைக்குமுரை கொண்டே அஃது ஒன்றாய் நில்லாது முத்திறப்பட்டுப் பலவாய்நிற்கு முண்மை பெறப்படுதலின், மூலப்பகுதி பரமசூக்குமப் பொருளன் றென்பதூஉம், தன் கீழ் நின்ற தத்துவங்களை நோக்கத்தான் சூக்குமமாயினும் அது தானும் ஒரு காரியப் பொருளேயாமென்பதூஉம், தாமே போதரும் என்க. அங்ஙனமது காரியப் பொருளாகவே அஃது அடிப்பட்ட காரணமாய் நில்லாது அழிவுபட்டுத் தன்னினுஞ் சூக்குமமான ஒரு தத்துவத்திற் சென்றொடுங்கு மென்பதுந் தானே முடிக்கப்படும். மூலப்பகுதிக்குக் காரணமாய் நிற்பது கலையென்னுந் தத்துவமாமென்று முன்னரே விளக்கிப் போந்தாம். முக்குணங்களுந் தோன்றாப் பிறந்த மகவின்மாட்டு அழுது பாலுண்முயற்சி நிகழக் காண்டலால் அம்முயற்சியைத் தோற்றுவிக்குங் கருவியாய், முக்குணங்களினுஞ் சூக்குமமா வதாய் உள்ள கலையென்னுந் தத்துவம் இன்றியமையாது வேண்டற்பாலதாமென்பதனையும் ஆண்டே நன்கெடுத்து நிறுவினாம். ஆகலின், மூலப்பகுதிக்குக் காரணமான கலை

D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/124&oldid=1591454" இலிருந்து மீள்விக்கப்பட்டது