உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் - 28

வெறுங்கற்பனை யாதலின்றி உண்மையாயுள்ள தத்துவமா மென்றே கடைப் பிடிக்க.

அற்றேற் கலையென்னுந் தத்துவமே ஏனைத் தத்துவங் எல்லாவற்றிற்கும் பரமசூக்கும காரணமாதல் அமையும், அதன் மேலும் ‘மாயை' யென வேறொன்று கோடல் எற்றுக்கெனிற் கூறுதும். மாயையோ எல்லாத் தத்துவங்கட்கும் மூலகாரணமாய் அருவாய் ஒன்றாய் வியாபகமாய் அழிவின்றி நிற்பது. அம்மாயையின் உப காரத்தைப் பெறுதற்குரிய உயிர்களோ கடல்மணலை அளவிடினும் அளவிடப்படாத னவாய்த் தனித்தனி வெவ் வேறாயுள்ளன. இவ்வுயிர்களும் பண்டு தொட்டே அறியாமை வயப்பட்டுக் கிடத்தலால் இவ்வறியாமை ஒழிதற் பொருட்டும் இவற்றின் அறிவிச்சை செயல்கள் கிளருதற் பொருட்டும் இறைவன் இம்மாயை யனின்றும் முப்பது தத்துவங்களைத் தனித்தனியே காரியப் படுத்து அவற்றை ஒவ்வோருயிர்க்கும், தனித் தனியே இயை விப்பானாயினன். இவ்வாறு உயிர்கடோறுந் தனித்தனியே இயைக்கப்பட்டுள்ள முப்பது தத்துவங்களுட் கலையும் ஒன்றாம். இக்கலை ஒவ்வோருயிரின் மாட்டும் தனித்தனியே பொருந்தி நின்று அவற்றின் அறிவுமுயற்சியை எழுப்பி நிற்பதாகலின் இதுவும் பலவாயுள்ள காரியப் பொருளே யாகும்;

து காரியப் பொருள் அன்றாயின் ஒன்றாயும் வியாபகமாயும் உயிர் கடோறுந் தனித்தனி இயையமாட்டாதாயும் நிற்றல் வேண்டும். அங்ஙனம் அது நில்லாமையானும், அன்றி நிற்கு மென்றே கோடுமாயின் ஆணவமலத்தான் மறைப்புண்டு கிடந்த உயிர் சிறிதறிவும் விளங்கப் பெறாமையாற் றன்னோடியைந்த ஏனை இருபத் தொன்பது தத்துவங் களான இயன்ற அகக்கருவி புறக் கருவிகளைப் பற்றி இயக்க மாட்டாவாய் வெறுங் கற்போற் கிடக்கு மாதலானும் உயிர் அவ்விருபத்தொன்பது தத்துவங் களையும் பற்றுமாறு இடைநின்று அவ்வுயிர்க்கு அறிவை யெழுப்பி அவற்றின் மேற் செல்ல விடுதற்குக் கலையென்னுந் தத்துவம் தனித் தனியே உயிர்கடோறும் வேண்டப்படு மென்பது முடிந்தது. முடியவே, கலை தனித்தனி உயிர்கள்பாற் பொருந்தும் ஏகதேசப் பொருளாவதும் மறுக்கலாகாத உண்மையென்று நாட்டப்படும். இவ்வாற்றாற் கலையென்னுந்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/125&oldid=1591455" இலிருந்து மீள்விக்கப்பட்டது