உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

101

தத்துவங் காரியப் பொருளாய் அழிதன் மாலைத்தாதல் இனிது பெறப்படுதலின் அது பரமசூக்குமமென்றும் அதுவே ஏனை எல்லாத் தத்துவங்கட்கும் மூலகாரணமென்றுங் கூறுதல் ஒரு சிறிதும் அடாது. ஆகவே, கலையினும் பரம சூக்குமமாய்க் கலைக்குங் கலையொழிந்த ஏனைத் தத்துவங்கட்கும் முதற் காரணப் பொருளாயுள்ள மாயையென்பதொன்று இன்றி யமையாது வேண்டப்படுமென்பது தானே போதரு மென்க.

னி

இனி மாயா தத்துவங்கள் தமது காரியநிலை கெட்டு ஒடுங்கியவழி மாயையென்பதொன்று உண்டென்று கோடு மாயினும், மீளவும் அவை தோன்றிய பின்னும் தோன்றி யவை காரியரூபமாயே நிற்குங்காலும் மாயையாகிய காரணம் உண்டென்று கோடுமோ இல்லையென்று கோடு மோவெனின்; உண்டென்று கோடுமாயிற் பொன்பணியாக மாறியவழிப் பொன்னென்னுங் காரணப் பொருள் தனித்து நில்லாமற் காரியத்தோடு ஒன்றாயிருக்கக் காண்டலின் அதுபோல மாயையுந் தனித்து நில்லாதாய்த் தன் காரியத் தோடு ஒற்றித்து நிற்குமென்றே கொள்ள வேண்டுதலின் ஆ ண்டதனை உண்டென்று கோடலாற் போந்தபயன் சிறிதும் இன்றாம்; இனி இல்லையென்றே கோடுமாயின் அதனைக் காரணப் பொருளென்றலாற் போந்தபயனும் ஒன்றுமில்லை; ஆகவே, முப்பது தத்துவங்களும் அழியுங் கால் அவை தாந்தாமே பரமசூக்குமங்களாய் அருவாய் நின்று மீளவுளவாங்கால் முறைமுறையே தூலவுருவங்களாய்த் தோன்று மென்றலே வாய்ப்புடைத்தா மெனின்; அறியாது கூறினாய், பொன்னிற் சில பகுதிகள் சில பல பணிகளாய் மாறியக் கால் பொன் என்பதே உலகத்தில்லையாய்ப் போனதுண்டோ எனக் கடாவுவார்க்கு இறுக்கலாகாமை யானும், உலகத்துப் பொற்றிரள்போலன்றி எல்லையற்ற பெருவியாபகத்ததாய் இம்முப்பது தத்துவங்களும் இவற்றால் அமைந்த எண்ணிறந்த புவனங்களும் மண்டிலங் களுமேயன்றி இன்னும் அளவுக்கு எட்டாத தத்துவங்களும் த புவனங்களும் மண்டிலங்களும் தன்கட் டோன்றினாலும் தான் அவற்றாற் சிறிதும் குறையமாட்டாதாய் உள்ள மாயை என்னும் பரமசூக்கும முதற்காரணப் பொருள் என்றும் அழிவின்றி நிற்குமென்பதே துணி பொருளாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/126&oldid=1591456" இலிருந்து மீள்விக்கப்பட்டது