உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

  • மறைமலையம் - 28

இனி இம் முப்பது தத்துவங்களும் அழிந்தவழி ஒன்று மில்லா வெறும் பாழாய்ப் போகுமென்று மாத்துமிகர் என்பார் கூறுமாறே கூறினாற் போதரும் இழுக்கென்னை யெனின்; நன்று வினாயினாய், காரியப் பொருள்கள் கெட்டாற் சூக்கும காரணங்களாய் நிற்றலே நூல்வழக் கானும் உலக வழக்கானும் ஆராய்ச்சிவகையானும் தெளியக் கிடப்பதல்லால் அவை ஒன்றுமில்லாச் சூனியமாதல் காணப் படாமையானும், இஞ்ஞான்றைப் பௌதிக நூலாரும் எப்பொருளும் இல்லாத சூனியமாதலில்லையென்றும் தூலசூக்கும நிலை வேறுபாடு தலன்றி அவை தாம் இல்பொருளாதல் இல்லை யென்றும் என்றுமுள்ள உள் பொருளே யாகுமென்றும் முடிவு கட்டியிருத்தலானும், அவர்கூற்று மெய்யொடு படாப் பொய்யு ரையேயாகு மென்று கடைப்பிடிக்க.

அடைதலன்றி

னி மாயையாவது உள்ளது மன்று இல்லது மன்று இன்னதென்றுரைக்கவாராத இயல்பிற்றென்று உரை யாமோ வெனின்; உரையாம். உள்ளதாயின் அஃதென்றும் உள்ளதாகல் வேண்டும்; இல்லதாயின் என்றும் இல்லதாகல் வேண்டும்; உள்ளதும் இல்லதுமாகிய இரண்டு தன்மை ஒரு பொருட்கு ஒருங்கே உளவாதல் யாண்டும் இல்லாமையின் அவ்வாறுரைத் தலும் ஒருவாற்றானும் உணர்ந்துரைக்க வாராத பொருளைப் பற்றிய ஆராய்ச்சி யாண்டும் நிகழாமையே இயற்கையாக, மாறையைப் பற்றிய ஆராய்ச்சி எச்சமயத்தானும் எந் நூலானும் நிகழ்த்தப்படுதல் கண் கூடாய் அறியக் கிடத்தலின் அதற்கு மாறாக அதனை அநிருவசனமென்றுரைத்தலும் ஒவ்வாவுரை யாமென்க. காரண காரியத் தொடர்பறிய வல்லார்க்குக் காரியப் பொருள்களின் தோற்ற வொடுக்கங்கள் பற்றிக் காரணப் பொருளின் இருப்புப் பொறிப் புலனாகாதாயினும் அனுமான வளவையின் வைத்து அறியக் கிடக்குமாதலின், பொறிப் புலனாகாமை யொன்றே கொண்டு மாயையை இல் பொருளென்றல் அறிவுமதுகை யில்லார் போலிக் கூற்றா மென் றொழிக. நீர் ஆவியாக மாறிக் கட்புலனாகாது போதலும் மாறிய ஆவி குளிரால் இறுகி மறித்தும் நீராய்க் கட்புலப் படுதலும் ஆன அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சியைச் சிறிதறிவு கொண்டு காண்பாரும் நன்குணர்வராதலின், இவ்வுலகங்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/127&oldid=1591457" இலிருந்து மீள்விக்கப்பட்டது