உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

104

  • மறைமலையம் - 28

காரணம் நிமித்த காரணம் என இரண்டாய் அடங்குமாறு நன்கு விளங்கும்.

இனி எல்லாப் பொருளும் அறிவில்லாச் னி சடமும் அறிவுடைய சித்துமென இருகூற்றின் கட்படும். காணப் பட்ட இவ்வுலகங்களும் இவ்வுலகத்துப் பொருள்களும் அறிவில்லாச் சடப் பொருள்கள். இச்சடப் பொருள்களோ டியைந்து நின்று சிறிதறிவுடையவாய்ப் போதரும் உயிர்கள் எல்லாம் அறிவுடைய சித்துப்பொருள்கள். இங்ஙனமாய சடசித்துக் களுக்கெல்லாம் காரணம் கடவுளே என வுரைப்பின், அங்ஙனமவன் அவற்றிற்குக் காரணமாதல் முதற்காரண வகையாலோ நிமித்த காரண வகையாலோ என வினாவப்படு மன்றே? அற்றாயின், ஏகான்மவாதி களுள் ஒரு சாராரான பாற்கரியர் மதம் பற்றி உலகுயிர்கட் கெல்லாம் கடவுள் முதற்காரணப் பொருளே யாவரென இறுக்கற்பாற்றெனின்; நன்று சொன்னாய்,

முதற்காரணப் பொருளுக்கும் அதனினின் றுண்டான காரியப்

ாருளுக் கும் பெயரும் வடிவுமொழிய வேறுபாடு சிறிதுமின்றாம், பொன் பணியாக மாறியவிடத்துத் தோடு குழை தொடி வளை என்றற்றொடக்கத்துப் பெயர் வேறுபாடும் அவ்வக் கலன்களுக்கேற்ற வடிவ வேறுபாடுமன்றி அக்கலன்கள் பிறிதெவ்வாற்றானும் அப்பொன்னின் வேறுபாடுறுவன வல்லவாம். இதுபோலக் கடவுளும் முதற்காரணப் பொரு ளெனின் உலகு உயிர் என்னும் பெயர் வேறுபாடும் அவ்வ வற்றிற்கேற்ற வடிவவேறுபாடும் ஒழித்து ஒழிந்த வகையா லெல்லாம் அஃது அவ்வுலகுயிர்களோடு ஒன்றாதல் வேண் டும். எதுபோலவெனின், ஒன்பது மாற்றுள்ள பொன்னிற் செய்த கலன்களும் ஒன்பது மாற்றுள்ளனவாகவே விளங் கும், பத்தரைமாற்றுள்ள பொன்னிற் செய்த கலன்களும் பத்தரை மாற்றுள்ளனவாகவே மிளிரும்; பொன்னிற் செய்த கலன்கள் செம்பாதலும் வெள்ளியிற் செய்த கலன்கள் இரும்பாதலும் யாண்டுமில்லை. இறைவனும் உலகுயிர்களும் ஒன்றேயெனின் அவை மூன்றன்றன்மையும் ஒன்றாதல் கண்டிலம். இறைவனோ வரம் பற்ற அறிவுடைப் பொருள்; உலகமோ ஒரு வரம்பிற் பட்ட அறிவில் பொருள், உயிர் களோ அவையும் ஒரு வரம்பிற்பட் சிற்றறிவுப் பொருள் கள். இறைவனோ எஞ்ஞான்றும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/129&oldid=1591459" இலிருந்து மீள்விக்கப்பட்டது