உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ

சிவஞான போத ஆராய்ச்சி

105

தன்மையனாய்த் தான் அசைவின்றி நின்றே எல்லாவற்றையும் அசைவித்தும் அறிவித்தும் வயங்கும் எல்லையற்ற ஆற்றலுடையான்; உலகமோ அடுத்தடுத்து மாறுபாடெய்தி அசைக்க அசைந்து செல்வது, உயிர்களோ அவையும் பிறப்பு இறப்பு வட்டங் களில் அடுத்தடுத்துச் சுழன்று மாறி மாறி வருவதுடன் அறிவித்தாலன்றித் தாமாகவே அறியமாட்டாதன. இவ்வாறு முதல் வன்றன்மையும் உலகுயிர்களின் றன்மையும் ஒன்றி னொன்று பெரிதும் முரணி நிற்றலின் அவன் அவற்றிற்கு முதற்காரணப் பொருளாதல் ஒருவாற்றானும் செல்லா தென்க. மற்று அவன் அவற்றின் நிமித்த காரணப் பொருளா தலே பொருத்த முடைத்தாமென்க. எங்கும் நிறைந்த தனது அருள் வெளியிற் கிடக்கும் அவ்வுலகுயிர்களையெல்லாம் இயக்கியும் அறிவித்தும் வருதலிற் றன்வயத்தனாயுள்ள அக்கருத்தாவே தன்னாற் பலவகையாகத் திரிக்கப்படும் முதற்காரணப் பொருளாதல் யாங்ஙனமென்று பகுத்தறிய மாட்டாது அவை இரண்டனையும் ஒன்றெனப் பிறழ்த்தி யுரைக்கும் மடமையிற் பெரியது பிறிதில்லை யென்று கடைப்பிடிக்க

அற்றேலஃதாக, உலகத்திற் கருத்தாவாய் நிற்பாரெல் லாம் காரணகாரியங்களோ டொன்றாய் நில்லாது வேறாகவே நிற்பக் காண்டும்; குடத்தை வனையுங் குயவன் மண்ணினுங் குடத்தினும் வேறாகவே நிற்கின்றான். ஆகவே, நிமித்த காரணப்பொருள் முதற்காரண காரியங்களோடு ஒருங்கியைந்து நிற்க மாட்டா தென்பது பெறப்பட்டு, இறைவனும் நிமித்த காரணப் பொருளாயின் மாயையினும் மாயா காரியவுலகங் களினும் இயைபின்றி வேறாய் நிற்குமெனவும், அங்ஙனம் நிற்பின் அவன் சருவவியாபகன் அல்ல னெனவுங் கொள்ளப் பட்டு வழுவாமா லெனின்; வழுவா மாறில்லை; உலகத்துக் கருத்தரெனப் படுவாரெல்லாம் ஏகதேச வியல்பும் கருவி கடுணையின்றி எதனையுஞ் செய்ய மாட்டாமையும் உடையர்; அதனால் அவர் முதற் காரண காரியப் பொருள்களொடு ஒருங்கியைந்து நின்று செய்ய கில்லார். முதல்வனோ மாயையின் பரப்பெல்லாம் நிறைந்து நின்று அண்ட பேரண் டங்களையும் அவற்றிற் பட்ட உடம்பு களையும் இடைவிடாது தோற்றுவித்து வரும் வரம்பி லாற்றல் உடையனாகலின், அவன்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/130&oldid=1591460" இலிருந்து மீள்விக்கப்பட்டது