உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் 28

முதற்காரண காரியங் களோடு ஒருங்கியைந்து நிற்பானென்பது தேற்ற மாம். எனவே, உலகின்கட் காணப்படும் நிமித்த காரணப் பொருளினியற்கையை உலகிற்கு முதல்வரான இறைவன் பால் ஏற்றுதல் பெரிதும் பிழை பாடுடையதாமென்றுணர்க. அஃதொக்கு மன்னாயினும், நிமித்த காரணப்பொருள் முதற்காரணப் பொருளோடு ஒருங்கியைந்து நின்று காரியத்தைத் தோற்று விக்குமாறு உலகின்கட் கண்டிலமா லெனின்; அறியாது வினாயினாய், சிலந்திப்பூச்சி தன்னுடம் பிலிருந்து நூல் தோற்று விக்குமாறும், நிலம் தன்கட் கிடந்த வித்தினின்று முளை தோற்று விக்குமாறும் இவ்வுண்மையை இனிது விளக்கும்; சிலந்தி என்னும் உயிரும் அவ்வுயிர் நின்ற உடம்பும் அவ்வுடம்பினின்று போதரும் நூலும் முறையே நிமித்த காரண முதற்காரண காரியங்களாதல் காண்க; சிலந்தி என்னும் உயிர் நிமித்த காரணப் பொருளாய் அதனுடம்பெங்கும் பிரிவின்றி நிறைந்து நிற்றல்போல இறைவனும் மாயையெங்கும் பிரிவறக் கலந்து நிற்குமென்ப தூஉம், அவ்வுயிர் தன்னுடம்பாகிய முதற்காரணச் சடப் பொருளினின்று நூலாகிய காரியத்தைத் தோற்று விக்குமாறு போல முதல்வனும் தான் கலந்து நிற்குந் தன்னுடம் பாகிய மாயையினின்றும் அளவிறந்த அண் பிண்டங்களை யெல்லாந்தோற்றுவிக்கு மென்பதூ உம் நுனித்தறிந்து கொள்க. இன்னும் நிலமும் நிலத்தின்கட் கிடந்த வித்தும் அவ்வித்தின் முளையும் முறையே நிமித்த காரண முதற் காரண காரியங்களாகும்; நிலமாகிய நிமித்த காரணத்தின் கண் விதை யென்னும் முதற்காரணப் பொருள் அடங்கி நிற்குமாறு போல முதல்வன் அருள் வியாபகத்திலே மாயை அடங்கி நின்று, நிலத்தினீரத்தால் விதையினின்று முளை கிளம்புதல் மான இறைவனருட் சத்தியின் உந்துதலவால் அம்மாயை தன்னிலிருந்து அண்ட பிண்டங்கள் வெளிப் படுக்கு மென்க. இவ்வாற் றால் நிமித்த காரணப்பொருள் ஏனைக் காரண காரியங்களோடு இயைந்து நிற்குமாறு தெள்ளிதிற் புலப்படும். இதுபற்றியே முண்டகோப நிடதத்து முதல் அத்தியாயத்து ஏழாம் மந்திரம், “சிலந்திப் பூச்சி யானது நூலைத் தோற்று வித்து உள்ளிழுத்துக் கொள்ளு மாறு போலவும், நிலத்தி லிருந்து ஆண்டுகடோறும் புற் பூண்டுகள் முளைக்குமாறு போலவும், உயிரோடுலவும் ஓராண் மகன் தலையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/131&oldid=1591461" இலிருந்து மீள்விக்கப்பட்டது