உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் - 28

உலகத்திற்கு முதற்காரணம் மாயையெனப் பிறிதொன்று கோடல் மிகை யாமாலெனின்? நன்று சொன்னாய், ஒரு குயவன் மண்ணாற் குடத்தை வனையும் முன் அவன் அதனை அதனால் இவ்விவ்வாறு வனையற்பாற்றென்று நினைவில் அமைத்துக் கொள்வன்; அவன் தன் நினைவில் அமைத்த குடத்தின் வடிவிற்கு ஏற்ப மண்ணின் கண் ஒன்றை வனைந் தெடுப்பன், இங்ஙனம் அல்லது மண்ணையின்றி அவன் தனது நினைவையே ஒரு குடமாகத் திரட்டிப் புறத்தே கொடுப்பானல்லன்? அவனது நினைவி லமைந்த குடம் அறிவு மாத்திரையாயுள்ளது? மண்ணிலமைந்த குடமோ சடப்பொருள் வடிவாய் நிற்பது. அறிவு மாத்திரை யாயுள்ள குடத்திற்கு முதற்காரணம் அறிவு; சடப்பொருள் மாத்திரை யாயுள்ள குடத்திற்கு முதற்காரணம் மண். மண்ணும் அறிவும் தம்மியற்கையின் மாறாயிருத்தலால், அவற்றின் காரியமான அறிவுக்குடமும் மட்குடமுந் தம்முள் வேறேயாம் என்க. அற்றாயினும், மட்குடத்தின்றோற்றத்திற்குக் குயவன தறிவின் கண் அமைந்த குடம் நிமித்தக்காரணமாய் வேறு நின்ற தென்றுணர்ந்து கொள்க. காள்க. இதுபோலவே இறைவனது சிற்சத்திக்கண் அமைந்த உலகின்வடிவும், மாயையின்கண் அமைந்த உலகின் வடிவும் தம்முள் வேறு வேறியல்பினவா மென்ப துணரற்பாற்று. ஏதொரு வடிவும் பயனு மின்றிக் கிடந்த மாயையை உயிர்கட்குப் பல்வேறுடம்பு களாகவும் அவ்வுடம்புகள் உலவுதற்குப் பல்வேறுலகங்க ளாகவும் உருவாக்கி அதனைப் பயனுறுத்துவான் வேண்டி, எல்லாம் வல்ல இறைவன் தனது திருவுள்ளத்தின்கண் அஃது இவ்விவ்வாறு ஆகுக என்று நினைந்தவழி அந்நினைவின்கட் டோன்றிய வடிவியாது அதுவே அவனது சிற்சத்தி வடிவென்றும், அச் சிற்சத்தி வடிவிற்கேற்ப மாயையின்கட் டோற்றிய பஃறிறப்பட்ட வடிவுகள் யாவை அவையே

சடப்பொருள் வடிவென்றும் பகுத்துணர்ந்து கொள்ளப் படுமாகலின், சடப்பொருள் வடிவங்களுக்கு முதற்காரணப் பொருளாவது மாயையே யாவதன்றி இறைவனது சிற்சத்தி u யாகாமை கடைப்பிடித்தறிக. அங்ஙனமாயினும், மாயையிற் காணப்படும் வடிவங்கள் அத்துணைக்கும் நிமித்த காரண மான அறிவுருங்கள் இறைவன் றிருவுளத்தின்கண் முற் கொண் டமைந்து கிடக்குமென்பது குயவனதறிவின் கட் குடத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/133&oldid=1591463" இலிருந்து மீள்விக்கப்பட்டது