உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

109

வடிவும், ஓவியம்வல்லான தறிவின்கண் ஓவியத் தின் வடிவும் முற்கொண்டு அமைந்தாலன்றி, மண்ணின்கட் குடமும் படத்தின்கண் ஓவியமும் தோன்றா வாறுபோல, முதல்வன் றிருவுளத்தின்கண் மாயையின் வடிவுகள் முற்றும் முற்பட அமைந்தாலன்றி, அம்மாயையில் அவை தோன்று தற்குச் சிறிதும் இடனில்லை யென்று தெற்றென அறிந்து கொள்க. எனவே, சடத்தினுருவுக்கு ஒரு தலையாய் முன்னிற் பது சித்துருவா மென்பதும் இது கொண்டு முடிக்கப்படும்.

ஆராய்ந்தறியாதார்

அற்றேல், உருவுடைப்பொருள்களெல்லாம் அழிதன் மாலையவாதல் எல்லாரானுந் தெளியக்கிடந்தமையின், முதல்வனறிவும் உருவுடைத்தாமெனின் அதுபற்றி அவனும் அழியுமியல்பினனாம் என்று கொள்ளப்பட்டு வழுவாமால் எனின்? அற்றன்று; உருவுடைப் பொருள்களெல்லாம் அழியும் இயல்பினவென்பது உரையாம்? உருவுடைச் சடப்பொருண்மாத்திரமே அழிவதல்லாமல் உருவுடைப் பொருள்களெல்லாம் அழியுமெனல் உண்மை யன்றாம். அல்லதூஉம் பொருள்கள் அழி வெய்துவது உருவு டைமையால் அன்று; அஃது அவ்வவற்றின்கண் உள்ள இயற்கையால் என்று கடைப்பிடிக்க. அன்றியும் அழிவு’ என்பதுதான் யாது? ஒன்று பருப்பொருளாயிருந்த நிலைமை கெட்டு நுண்பொருளாய் மாறுதலாமன்றே. பருப்பொருள் நுண்பொருளாதலும், நுண்பொருள் மறித்தும் பருப் பொரு ளாதலும் ஆகிய

ருவகை நிலையும் அறிவில்லாச் சடப் பொருளுக்கன்றி அறிவுடைய சித்துக்கு ஒருகாலும் இல்லை யன்றே. அழியுமியற்கை சடத்தின்கண் மாத்திரமே காணப் படுதலால், அச்சடத்தோடு ஒருமித்து நின்ற உருவமும் அஃதழியுங்காலத்து அதனோடு உடனழியும்; எனவே, சடத்தினியற்கையால் உருவழிவு நேர்கின்ற தல்லாமல் உருவினியற்கையாற் சடத்தினழிவு நேர்வதில்லை என்பதூ உம், இங்ஙனம் பெறப்படவே உருவெல்லாம் அழியுமென்று கூறும் உரை பொருந்தாதென்பதூஉம் தெற்றென விளங்கா நிற்கும்.

கண்

இனிச் சடப்பொருள்கடம்முள்ளும் நுண்ணிய பொருட் உள்ளவடிவு எஞ்ஞான்றும் அழியாதாய் நிற்கப், பருப்பொருளாய் இருப்பவற்றுக்கட் டோன்றிய வடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/134&oldid=1591464" இலிருந்து மீள்விக்கப்பட்டது