உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

  • மறைமலையம் - 28

மாத்திரமே அழிவுற்று மாறுமென்றும் உணர்ந்து கோடல் வேண்டும். ஒரு கருப்பங்கட்டி திரண்டு திண்ணி தாய் இருக்குங்கால் அது கட்புலனாம் வடிவுடையதாத லோடு நாவினாற் சுவைக்கப்படும் இனிமையும் வாய்ந்த தாயிருக் கின்றது; இஃது இத்திண்ணிய நிலை கெட்டுப் பாகாய் உருகியவழியுங் கட்புலனாவதாய் நாவிற்குத் தீஞ்சுவை பயப்பதாய் நிற்கின்றது; மற்று இஃது முற்றும் ஆவியாய் மாறியக்காற் கட்புலனாம் வடிவும் நாவின் சுவையும் காணப்படா தாகின்றது. அங்ஙனங் காணப்படா தொழியினும், அவ்வாவியைக் கண்ணாடிக் குப்பிகளிற் பிடித்துவைத்துக் குளிரால் இறுகச்செய்துழிப் பெயர்த்தும் அது கட்புலனாம் வடிவும் நாப்புலனாஞ் சுவையும் உடைய தாதல் தெளியப்படும். ஆகவே, பொறிப்புலனாம் ம் வடிவுஞ் சுவையும் அது பருப்பொருளாய் நின்றுழி விளங்கித் தோன்றி நின்று பின்னரது நுண்பொருளாய்த் திரிபுற்றவழித் தாமும் நுண்ணிய நிலையெய்தி விளங்காமல் நின்றன வென்பது இது கொண்டு இனிது முடிக்கப்படும். ஆதலாற் பருப் பொருட்கண்ணதான வடிவும் தான் பற்றிய பொருட்டிரிவுக் கேற்ப நுண்ணிய நிலைமை யெய்தி நின்றதேயல்லாமல் முற்றும் இல்லாத வெறும் பாழாய் ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லையென்க. க்கூறியவாற்றால் அழிவு என்னுஞ் சொற்கு இல்லாத வறுஞ் சூனியமாய்ப்போதல் என்று உரைப்பார் உரை பாருளுண்மையொடு பெரிதும் முரணுதலின் அவருரைக் கோள் உள்ளீடில்லாப் புரையே யாதலும், பருப் பொருள் நுண் பொருளாய்த் திரிபுறுதலே அச்சொற்குப் பொருளாதலும் நன்கு பெறப்படும். இன்னும், பருப்பொருள் நுண்பொருளாய்த் திரிபெய்தியவழியும் அதன்கண் உள்ள வடிவு வெறும்பாழாய் ஒழியாமல் நுண்ணியதாயே நின்று பெயர்த்தும் அது பருப்பொருளாயவழித் தானும் அப் பெற்றிக்கேற்பக் கட்புலனாதல் காண்டலின், இங்ஙனம் இரு திறமாய் வேறுபடாமல் ஒரே நிலையில் நிற்குஞ் சூக்குமப் பொருட்கண் உள்ள வடிவுதானும் அதன் பெற்றிக்கேற்ப மாறாதாய் நுண்ணியதாய் ஒருபடித்தாயே நிற்குமென்பதும் தானே பெறப்படும்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/135&oldid=1591465" இலிருந்து மீள்விக்கப்பட்டது