உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

111

இனி, இவ்வாறு சூக்குமமாய் நின்ற சடப்பொருட் கண்ணதான வடிவமே என்றும் ஒருபடித்தாய் நிற்குமெனும் உண்மை மறுக்கப்பட்டதாயின், நுண்பொருட்கெல்லாம் நுண்ணியதாய் எல்லையற்ற பேரறிவுப்பொருளாய்த் திகழும் இறைவற்குள்ள அறிவுருவம் என்றாயினுஞ் சிதைவு படு மெனக் கூறல் உண்மையறிவினார்க்கு எட்டுணையும் இசையு மோ? இறைவனறிவு ஏனைச்சடப் பொருள்போற் பருத்த லும் நுண்ணிதாதலும் இன்றி என்றும் ஒரு பெற்றித்தாயே நிற்கும் நீரதாகலின் அவனதறிவின்கண் ஏய்ந்த வுருவமும் அங்ஙனமே நிற்குமென்றல் பேரறிவினார்க்கு விளங்கா தொழியுமோ? என்று இம்முறையானெல்லாம் பகுத்துணர வல்லார்க்கு இறைவன தறிவுருவம் அழியா நிலைமைத்தாதல் அங்கையங்கனிபோல் விளங்குமென்க.

த்

தொக்குமன்னாயினும், இறைவன தறிவுக்கும் உருவம் உண்டென்றல் எற்றாற் பெறுதுமெனிற்; கூறுதும், நம்மனோர தனுபவத்திற்குப் பொருளாய்க் கிடக்கும். இந்நிலவுலகம் முதலான எண்ணிறந்த உலகங்களும் இவ் வுலகங்களில் அமைந்த பலதிறப்பட்ட பண்டங்களும் பல வேறு வகைப்பட்ட உயிர்களுக்கும் நிலையாயுள்ள பல்வேறு டம்புகளும் இப்பருப் பொருணிலைமை எய்துதற்குமுன், எல்லாம் மிகநுணுகிய ஆகாயவடிவில் நின்றனவென்பது எல்லா நூலார்க்கும் உடன்பாடாம். அத்துணை நுணுகிய நிலையிலிருந்த அவை பெரிதும் வியக்கற்பாலவாம். இத் திறத்த பல்வேறு வடிவுடைப் பொருள்களாய் யாங்ஙனம் மாறின வென்று ஆராயலுறு வார்க்கு அறிவில்லாச் சடப் பொருள் களான அவை தாமாகவே அங்ஙனம் பலதிறப் படுதல் ஆகாமையின் அவற்றை அங்ஙன மெல்லாம் ஆக்க வல்ல ஒரு பேரறிவுப் பொருள் இன்றியமை யாது வேண்டப் படும் எனும் உண்மை நன்கு விளங்கா நிற்கும். அற்றன்று, நுணுகிய நிலையிலிருந்த அவை குளிரால் இறுகிப் பலதிறமாய் மாறுதலே அவற்றின் இயற்கையாமாகலின், இதனைச் செய்தற்கும் ஓர் அறிவுப்பொருள் வேண்டுமென்றால் சாலா தெனின்; நன்று கூறினாய்., அறிவில்லாச் சடப்பொருட்கு இயற்கையாவது பிறிதொன்றன் சேர்க்கையில்லா வழி யெல்லாம் என்றும் ஒரு படித்தாகவே நிற்குந் தன்மையேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/136&oldid=1591466" இலிருந்து மீள்விக்கப்பட்டது