உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

  • LD60LD60QUUILD - 28

பனிக்கட்டி என்றுங் குளிரும், தீச் சுடும்,காந்தம் பற்றிய இரும்பைப் பற்றிய படியே கிடக்கும்; என்னை? தீயின் சேர்க்கையால் பனித்திரளை நீராய்

ருகி ஆவியாக மாறுதலும், நீரின் சேர்க்கையால் தீக்குளிர்ந்து ஆறிப் போதலும், சிறான் ஒருவன் காந்தத்தினின்று இரும் பைப் பிரித்தெடுத்தால் அவை வேறாதலும் கண்கூடாய்க் காண்டு L மாதலின் என்க. இங்ஙனமே, ஆகாயவடிவில் நுணுகி நின்ற உலகம் குளிரால் இறுகிப் பருப்பொருளாவதூஉம், பருப் பொருளாய் நின்றது பெயர்த்தும் தீயின் சேர்க்கையால் ஆகாயமாவதூஉம் வப்பமுந்தட்பமும் மாறிமாறிச் சேர்தலால் என்று உரைக்கலுறுவார்க்கு, இவற்றின் மாறு தலுக்கு இடைப்பட்ட காரணங்களாயுள்ள வெப்பமுந் தட்பமுங்கூடச் சடப்பொருள்களேயாய் முடிதலின், அவையும் ஒருபடியாகவே இயங்கல் வேண்டுமல்லால் தம்மியற்கை மாறி ஒருகால் வெப்பமும் பிறிதொருகாற் றட்பமுமாய் மாறிமாறி மிக்கெழுந்து தோன்றுதல் என்னை யெனக் கடாயவழி இவற்றிற்கெல்லாம் முடிந்த நிமித்த காரணமாய் அறிவுடைப் பொருள் ஒன்று இன்றியமை யாது கூற வேண்டுதலின் அதுவும் அமையா தென மறுக்க. வெப்பத்தின் சேர்க்கையால் நுணுகிய நிலையில் வெப்ப மாயே நின்றது. அங்ஙனமே நில்லாமல் டையொரு காற் குளிரால் இறுகவேண்டுவ தென்னையென நுனித்துக் காண வல்லார்க்கு அங்ஙனம் அம்மாறுதலைச் செய்தது முதல் வனது திருவுளப்பாங்கேயா மென்பது புலப்படும். ஆதலான், மிக நுண்ணிய மாயை வடிவாய்க் காரண நிலையில் நின்ற இவ்வெண்ணிறந்த வுலகங்களும், இவ் வுலகத்துப் பல் பொருள்களும் அக்காரண நிலையில் நின்று புலப்பட்ட இக்காரிய நிலையிற் பலமாறுதல் களை எய்துமாறு செய்த அம்முதல்வனது பேரறிவு அவற்றை அங்ஙனம் விளை விக்கும் முன் எத்துணை விளக்கம் உடையதாய் இருத்தல் ண வேண்டும்! ஆகையால், இம்மாயையில் அமைக்கப்படும் அளவற்ற வடிவங்களுக்கும் முதலான அறிவினுருவங்கள் இறைவன் றிருவுளத்தின்கண் அமைந்து நிற்க வேண்டுவது இன்றியமையாத முடிபொருளேயாமென்க.

இனி அறிவு விளக்கமாவது அறிவு உருவுடைத்தாய் நிற்றலேயாமென்பதூஉம் ஒரு சிறிது காட்டுதும். பிறந்த போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/137&oldid=1591467" இலிருந்து மீள்விக்கப்பட்டது