உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

113

அறிவு மழுங்கிய நிலையிற் கிடக்கும் மகவு பின்னர் நாட்சென்று வளர வளர ஐம்பொறிகளின் வாயிலாக உலகத்துப் பொருள் களை முறைமுறையே யறிந்து அப் பொருட்டன்மைகளையும் அவற்றின் வடிவங்களையும் மெல்ல மெல்லத் தன் உள்ளத்திற் பாவிக்கவல்லதாய் வளர்ந்து ஆண்மைப்பருவம் எய்தியபோது அறிவு விளக்கமுடைத்தாய்த் திகழ்தல் கண்டாமன்றே!

பொருட்டன்மைகளையும் அவற்றின் வடிவங்களையுங் கருத மாட்டா நிலையில் அறிவு விளங்காதிருந்தமையும், அவற்றைக் கருதவல்ல நிலையில் அது விளக்கமுடையதாதலும் தேர்ந்து ணரின் விளங்கிய நிலையில் உலகத்துப் பொருள்களோ ாத்த உணர்வுகளும் உருவங்களும் அறிவின்கண் அமைந் தழியாதிருத்தல் இனிது புலனாம். எனவே, அறியாக்காலத்து உருவிலதாய் நின்ற உயிரின் அறிவு அறியுங் காலத்து உருவுடைத்தாயே விளங்குமென்பதும், உலகத்துப் பொருள் களின் வாயிலாக அறிவினுருவு உயிரின்கட் டோன்றியதாயினும் அஃது ஏனைச்சடப்பொருள் வடிவுபோல் அழியுந்தன்மைத் தன்றாய் என்றும் நிலைபேறாய் நிற்குமென்பதும் ஐய மின்றித் துணியப்படுமென்க. அற்றேல், அஃது அழியாது நிற்றல் எற்றாற் பெறுதுமெனின், வேட்கோவன் தான் வனைந்த குடம் சால் ம் முதலியன எத்துணை முறை உடைந் தழியினும், அவற்றைத் திரும்பத் திரும்ப வனைந்து தருத லானும், அங்ஙனம் வேண்டிய போழ்தெல்லாம் அவற்றைச் செய்து முடித்தற்கு அவனதறிவின் கண் அமைந்த அவற்றின் உருவங்கள் நிலைபெற்று நின்றாலன்றி அது கடை போகாமை யானும் அவனறிவினுருவங்கள் சிதையா நிலைய வாதல் பெற்றாம். பெறவே, நிலைபெற்ற உருவுடைத் தாகிய உயிர்களின் அறிவு என்றும் விளக்கமுடையதாய் நிற்கு மென்பதூஉம் தானே போதருமென்க.

இனி இறைவனும் அறிவுடைப் பொருளேயா மென்பது மேலே பெறக் கிடந்தமையானும், அவனதறிவும் ஒரு ஞான்றும் மறைபடுதலின்றி என்றும் விளக்க முடைத் தாதல் சான்றோர்க் கெல்லாம் ஒப்பமுடிந்தமையானும், அவனதறிவும் என்றும் உருவு கொண்டே நிற்குமென்பதுந் தெளிந்த முடிபாம். இறப்பவும் நொய்தாய் ஏதொரு வடிவும் புலப்படக் காட்டாது நின்ற மாயையில் ஆக்கப்படும் பலதிற வடிவங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/138&oldid=1591468" இலிருந்து மீள்விக்கப்பட்டது