உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் - 28

இறைவன் றனது திருவுளத்திற் கருதி நின்றமையால் அவன் மாட்டு எல்லா அறிவுருவங்களும் முற்கொண்டமைந்து கிடந்தனவென்று கடைப்பிடிக்க.

வடிவம்

இனி அறிவுக்கும் உருவம் உண்டென்பது இஞ்ஞான்றை மனநூல்வல்லார் ஆராய்ந்து கண்ட ஓர் உண்மை முடிபுமாய் இலங்கா நிற்கின்றது. பிராஞ்சு நாட்டில் இவ்வாராய்ச்சியில் மிக வல்லுநராய்த் திகழும் பாரதகர்* சேய்மைக்கணிருந்து ஒருவர் நினைக்கும் நினைவுகளையும் அவருளத்தில் நிகழும் உணர்வு நிகழ்ச்சிகளையும் நொய்ய பொறிகளின் உதவியாற் ப மெடுத்துக் காட்டுகின்றார். ஒருவர் நினைத்த நினைவு தான் இசைந்து நின்ற மனவெளி யை இயக்க, அம்மனவெளி தான் பற்றிநின்ற பொருள் வெளியை இயக்க, அப்பொருள்வெளி தன்கண் எழும் அணுவினியக்கத்தால் அவ்வறிஞர் அமைத்த பொறியின் தகட்டைத் தாக்க, மிக நுணுகிய அதிர்ச்சியையும் ஏற்கும் அத்தகட்டில் அந்நினைவோடொத்த பதிகின்றது, தூக்கணங் குருவியை நினைக்கு மொருவன் நினைவு அத்தகட்டில் அக்குருவியினுருவைத் தோற்றுவிக்கின்றது; மெல்லிய முல்லை மலரை நினைக்கும் நினைவு அதன்கண் அம்மலரின் வடிவைத் தோற்றுவிக்கின்றது; இங்ஙனமே எவ்வெவர் எவ்வெப் பொருள்களை நினைக்கின்றனரோ அந்நினைவிற்கேற்ற வடிவுகள் அத்தகட்டின் கட்புலனாய்த் தோன்றுகின்றன. இவ்வாறு புறப் பொருளின்கட் புலனாகும் வடிவுகளைத் தோற்றுவிக்கும் நினைவும் அவ்வடிவுகளோ டாத்த உருவங்கள் உடையதாய் இருந்தால் அல்லது அப்புறப் பொருள்கள் வடிவுடையவாதல் செல்லாமை தேற்றமாம். புறத்தேயுள்ள ஒருபொருளின்கண் ஒரு வடிவு தோன்றும் முன் அதனை அதன் கட் டோற்றுவிக்குங் கருவி யாய் அறிவின் உருவு அகத்தேயுள்ள உயிரின்கண் அமைந்து கிடத்தல் மறுக்கலாகா உண்மையாய் நிலைபெறுதல் காண்க.

அற்றேல் அஃதாக இறைவனறிவு பல திறப்பட்ட உருவங்களுடைய தாமென்று கோடுமாயின், வேறு பாட்டின்றி ஒரு பெற்றியனாய் நிற்கும் அவனது இறைமைக் குணத்திற்கு வேறுபாடு வந்தெய்தி வழுவாமாலெனின், அறிவில் பொருள்க ளெல்லாம் அழியுமியல்பினவாகையால், அதுபற்றி அவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/139&oldid=1591469" இலிருந்து மீள்விக்கப்பட்டது