உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனை

சிவஞான போத ஆராய்ச்சி

115

கண் வடிவங்களும் வேறுபாடு உறுவனவாகின்றன; மற்று எல்லாம்வல்ல இறைவனோ அவைபோல் அறியு நீர்மையன் அல்லனாய் என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பனாகலின் அவனது பேரறிவின்கண் மரீஇய உருவங்களும் என்றும் ஒரு பெற்றிய வாயே நிற்கும்; ஆதலால் அவை வேறுபாடெய்தி அவற்கு வழுவாதல் யாண்டையதென மறுக்க. அஃதொக்கு மாயினும், நம்ம னோரது அறிவின்கட் காணப் படும் பல்வேறு நினைவுருவங் களும் இன்ப துன்பங்களுக் கிடனாய் நம்மை வேறுபாடுறு வித்தல்போல, முதல்வன் மாட்டும் பல்வேறு நினைவுருவங்கள் தோன்று மென்றுரைப் பின் அவையும் இன்ப துன்பங்களிற் படுத்து வேறுபாடு உறுவிக்குமாலெனின்; நன்று கடாயினாய், நம்மனோரெல்லாம் பண்டு தொட்டே அறியாமை வயப்பட்ட வராய் இருவினை நுகர்ச்சிக்கட் கிடந்துழலுநராகலின், அவ்விருவினை வழித் தோன்றும் அவர்தம் நினைவுருவங்கள் அவரை வேறுபாடுறுத்தா நின்றன; மற்று இறைவனோ என்றுந் தூய அறிவினனாய் விளங்குதலானும், அதனால் இருவினைப் பிணிப்பும் அது பற்றி வரக் கடவ இன்பதுன்பங் களும் அவற்கின்மையானும், உயிர்களைப் பற்றிய அறியாமை யைத் துடைத்து அவை வயிற்றுக்குத் தனது பேரின்பத்தை வழங்குதற் பொருட்டுத் தனது திருவுளத்தெழுந்த பேரிரக்கங்காரணமாக அவை தமக்கு உடம்புகளாகவும் உலகங்க ளாகவும் முதற் பொருண் மாயையைத் திரிபு செய்து படைப்பான் வேண்டிக் கருதிய வாற்றான் அவன்கண் அந் நினைவுருவங்கள் தோன்றின வாதலானும் அவ்வருளறிவுருவங்கள் அவனை வேறு படுக்குமாறு யாங்ஙனமென விடுக்க. இருவினைகளையும் மாறிமாறி நுகருதற்கண் உண்டாம் நினைவுருவங்கள் ஒ வனை வேறுபடுத்துவதல்லால், அன்பு அருள் என்னும் கடவுட் குண எழுச்சிக்கட்டோன்றும் நினைவுருவங்கள் அவனை ஒரு சிறிதும் வேறு படுத்த மாட்டாவாய் அவனை அவை பேரின்பத்த ழுத்துமாறும் அனுபவத்தின்பாற் படுத்தறிந்து கொள்க. இத்துணையுங் கடவுள் மாயையின் வேறான நிமித்த காரணப் பொருளேயாமென்பதனை நிறுவுதற்கண் விரிந்தன. வாற்றால் மாயை உலகிற்கு முதற்காரணமா மென்பதும், கடவுள் அம்மாயையினின்று உலகங்களைத் தோற்றுவித்தற்கு

6

று

வ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/140&oldid=1591470" இலிருந்து மீள்விக்கப்பட்டது