உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

  • மறைமலையம் - 28

என்பது அடையாளம் அல்லது குறி, எனவே அச் சொற் றொடரும் முழுமுதற் கடவுளின் அடையாளமாக நாட்டப் பட்டகல்லினையே உணர்த்துவ தாகின்றதெனக் கடைப்பிடிக்க வ்வுண்மை வரலாறு கொண்டு, பண்டைத் தமிழ் மக்களின் முன்னோர் தாம் இந்திய நாட்டுக்குப் புறம்பே சேய்மைக் கண்ணுள்ள நாடுகளிற் பல்லாயிர ஆண்டுகட்குமுன் உறைந்த ஞான்றும் முழுமுதற் கடவுளின் திருவுருவ அடையாளமாகிய சிவ லிங்கத்தினையே உயர்ந்த மலைக் குவடுகளின் மேல் வைத்துத் தொழுது வந்தவாறு போலவே அவர் வழிப் போந்த பின்னோரான தமிழ் மக்களும் இற்றை ஞான்றும் அத் திருவடையாளத்தைத் திருக்காளத்தி திருச்சிராப்பள்ளி திருப்பரங்குன்றம் திருத்தணிகை முதலான மலை முடிகளினும் மலைகளில்லா ஏனையிடங்களில் நிலத்தின் கண்ணும் நிறுத்தி வழிபட்டு வருகின்றார் என்பது தெற்றென உணரப் படும், இனிச் கல்வடிவி னும், இயற்கையாக விளங்கும் தீவடிவே விளங்கும் தீவடிவே இறைவற்குச் சிறந்த அடையாளமா மென்பது எவர்க்கும் ஒப்ப முடிந்த மையின், பினீசியர் என்னும் அப்பண்டைக் கால நாகரிக மக்கள் தயர்5 என்னுந் தமது புகழோங்கிய நகரத்தில் மிகப் பழைதாய் உள்ள கோயிலின்கண் நடுவண் அமைக்கப்பட்ட வேள்வி மேடை அல்லது யாக வேதிகை மேல் முழுமுதற் கடவுள் அடையாளமாக இரவும், பகலும் ஓவாது தீ எரியவிட்டு வழிபாடு செய்து வந்தனர். இவர்கள் பகலவனுக்குச் சாலப் பழைய பெயராய் வழங்கிப் போந்த எல் என்னுஞ் சொல் செந்தமிழ்ப் பழஞ்சொல்லாதலும் கருத்தில் பதித்தல் வேண்டும். எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை இவர்கள் எல்எலியன் என்னும் பெயர் வைத்து வழங்கிய பான்மையினை நுனித்தாராயும் வழிக் கட்புலனாய் விளங்கும் பகலவனொளி யில் அறிவுப் புலனான அறிவொளி யாய்த் திகழும் முதல்வன் இயற்கையாகவே முனைத்துத் தோன்றுவான் என்னுங் கருத்தினராய் அவரதனை வழிபட்டு வரலானா ரென்பது பெறப்படும். புறம்பே காணும் ஒளி வடிவான ஞாயிற்றை எல் என்று வழங்கினாற் போல அகத்தே காணும் அறிவொளி வடிவான முதல்வனையும் அவர் எலியன் என்று வழங்கிய நுட்பம் பெரிதும் பாராட்டற் பால தொன்றாம், எல் என்னும்

செயற்கையாகச் சய்து நிறுத்திய

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/165&oldid=1591496" இலிருந்து மீள்விக்கப்பட்டது