உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் - 28

அவர்க்குக் கருத்தாதல் பெற்றாம். அதனா னன்றே இன்று காறும் அம் மெக்கா நகரத்துத் திருக் கோயிலின்கட் சிவலிங்க வடிவமே போல்வதொரு திரு வுருவம் வைத்துப் பெரிதும் போற்றி வழிபடப்பட்டு வரா நிற்கின்றது. இவ்வரலாறுகள் கொண்டு பினீசியரும் அவரையடுத் துறைந்த அராபியரும் சிவலிங்க வடிவத்தினையே பண்டைக்காலந் தொட்டு வைத்து வணங்கி வருமாறு நன்கு புலப்படும்.

இனிப் பாபிலோனியர் அசீரியர் சாலடியர் பினீசியர் முதலான நாகரிகமாந்தர்க்கும் பிற்பட்ட காலத்தே மேற்றிசை யில் நாகரிக வாழ்க்கையிற் சிறந்தவராய் விளங்கிய கிரேக்கர்’ களும் பகலவனையே வழிபட்டு வந்தனர். பின்னர்ச் சிறிதுகாலங் கழித்து அவர் அப் பகலவனுள் விளங்குங் கடவுளைச் சியஸ்8 என்னும் பெயராற் பெரிதும் பாராட்டி இறைஞ்சி வந்தமை ஆராயற்பாற்று. அவர்கள் முழுமுதற்கடவுட்குச் சிறப்புடைப் பெயராகக் கொண்டு வழங்கிய சியஸ் என்னுஞ் சொல் ‘சிவம்’ என்று தமிழ்நாட்டார் ஞாயிற்றினுள் விளங்கும் முதல்வற்கு வழங்கி வருஞ் சொல்லோடு பெரிதும் ஒப்புமையுடைத்தாய் நிற்றலை உய்த்துணர வல்லார்க்கு அவர் இறைஞ்சிவந்த தெய்வமும் நம்மனோர் இறைஞ்சி வருந் தெய்வமும் ஒன்றேயா மென்னும் உண்மை புலனாகா நிற்கும். சியஸ் என்னும் அம்முதற் பெருங் கடவுளை ஒலிம்பஸ் என்னும் மலை முகட்டின் மேல் வைத்து அவர் வணங்கிப் போந்தமையும், சிவபிரானைப் போலவே அக்கடவுளுஞ் சடை முடியுடைய ராயும் முத்தலை வேல் ஏந்திய கையினராயும் சொல்லப் படுதலும் யாங்கூறு வதனைஇனிது நிறுவு மென்க. அவர்கள் முதல்வனை வழிபடுங் காலங்களி லெல்லாம் வேள்வித் தெற்றிமேல் தீ வளர்த்து அதன் வாயிலாகவே தமது வணக்கத்தை இறைவற்கு ஏற்பித்து வந்தமையும் அறியற் பாற்று. அவர்கள் அமைத்த கோயில்களின் வடிவமும் இத் தென்றமிழ் நாட்டிலுள்ள கோயில் வடிவத்தைப் பெரி தொத்து நிற்றலும் கருத்திற் பதித்தல் வேண்டும். வரிசை வரிசையாகக் கற்றூண்கள் நிறுத்தி அமைத்த அவர்கடம் கோயிலுள் கிணறுகுளங்களும் கோயிலின் வெளியே ஒரு பலிபீடமும் (வேள்வி மேடையும்) உள்ளே திருவுருவங் களின் எதிரே ஒரு பலிபீடமுமாக இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/167&oldid=1591498" இலிருந்து மீள்விக்கப்பட்டது